டூவீலர்களை போல் மைலேஜ் தரும் மாருதியின் புது கார்! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு கௌம்பி போயிருவீங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்ச பவர் அவுட்புட் 89.73 பிஎஸ் ஆகவும், 113 என்எம் ஆகவும் இருக்கும்.

Maruti Suzuki Fronx

ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77.5 பிஎஸ் பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளிப்படுத்தும். பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி மாடல், ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சிக்மா (Sigma) மற்றும் டெல்டா (Delta) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். இதில் சிக்மா வேரியண்ட்டின் விலை (Price) 8,41,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki Fronx CNG

மறுபக்கம் டெல்டா வேரியண்ட்டின் விலை 9,27,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) டீலர்ஷிப்கள் வாயிலாக ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி காரை, மாத சந்தா திட்டத்தின் கீழும் நீங்கள் வாங்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி காருக்கான மாத சந்தா 23,248 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில், அனைத்து கட்டணங்களும் அடங்கி விடும் என்பதால், இதுவும் கூட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய காரை கொண்டு வருவதற்கு மாத சந்தா திட்டம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொந்தமாக வாங்காமலேயே, ஒரு புதிய காரை பயன்படுத்துவதற்கு இந்த திட்டம் உங்களை அனுமதிக்கிறது. புதிய காரை பதிவு செய்வதற்கான கட்டணம், இன்சூரன்ஸ், சர்வீஸ் மற்றும் பராமரிப்பு என அனைத்து செலவுகளும் நீங்கள் செலுத்தும் மாத சந்தா தொகையிலேயே அடங்கி விடும். எனவே நீங்கள் மாத சந்தாவை மட்டும் செலுத்தினால் போதுமானது.

ஒரு சிலர் ஒரு காரை குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த விரும்புவார்கள். அவர்களுக்கும் கூட மாத சந்தா திட்டம் ஏற்றது. சொந்தமாக ஒரு காரை வாங்கி விட்டு அது பிடிக்கவில்லை என்றால் விற்பனை செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. மாத சந்தா திட்டத்தின் கீழ் பயன்படுத்திய காரை திரும்ப கொடுத்து விட்டு, வேறு ஒரு காருக்கு உடனடியாக மாறி கொள்ளலாம்.

இதற்கிடையே மாருதி சுஸுகி சிஎன்ஜி காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ சிஸ்டத்துடன் கூடிய 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்ட்டிவிட்டி போன்ற அம்சங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டபோதே சிஎன்ஜி ஆப்ஷனுடன்தான் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனம் பெரிதாக தாமதம் செய்யாமல் உடனடியாகவே ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷனை களமிறக்கியிருப்பது, அதை எதிர்பார்த்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Article Published On: Wednesday, July 12, 2023, 16:53 [IST]
English summary
Maruti suzuki fronx cng launched price features engine mileage variants
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+