வெறும் 5 நாளில்... இந்த புதிய மாருதி காருக்கு புக்கிங் தாறுமாறா குவியுது!! விலை கூட இன்னும் வெளிவரல...

மாருதி சுஸுகி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்திய ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாட்கள் செல்ல செல்ல வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில் மாருதி ஃப்ரான்க்ஸ் கார் புக்கிங்கில் எட்டியுள்ள புதிய மைல்கல் பற்றியும், இந்த புதிய காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி இந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் எத்தகைய வாகனங்களை களமிறக்கும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதல் நாளிலேயே இவிஎக்ஸ் என்ற எதிர்கால எலக்ட்ரிக் காருக்கான கான்செப்ட் வாகனத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கான்செப்ட் வாகனத்துடன் சில ஃப்ளக்ஸ்-ஃப்யுல் கார்களும் அந்த நாளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் காருக்கு புக்கிங் தாறுமாறா குவியுது

அதற்கடுத்த 2வது நாளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவி வாகனமும், அனைவரையும் சர்பிரைஸ் செய்யும் வகையில் புதிய ஃப்ரான்க்ஸ் காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்தது. இந்திய சந்தையில் பிரபலமான பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் காராக உருவாக்கப்பட்டுள்ள ஃப்ரான்க்ஸ் மாடல் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸாவை போன்று உள்ளது என சில எதிர்மறையான கருத்துகள் வெளிவந்தாலும் ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை வெற்றிக்கரமாக 1,500-ஐ கடந்துள்ளது.

மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்துடன் ஃப்ரான்க்ஸ் காருக்கான முன்பதிவுகள் 2023 ஆட்டோ எக்ஸ்போவின் 2வது நாளில் (ஜனவரி 12) தான் துவங்கப்பட்டன. இந்த வகையில் பார்க்கும்போது, முன்பதிவு துவங்கப்பட்ட வெறும் 5 நாட்களில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை 1,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை இதோடு நின்றுவிட போவதில்லை. விருப்பப்படுவோர் ரூ.11,000 என்ற டோக்கன் தொகையில் ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்யலாம்.

புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் காருக்கு புக்கிங் தாறுமாறா குவியுது

மறுப்பக்கம், ஜிம்னி எஸ்யூவி வாகனத்தை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த விபரங்கள் யாவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா வெளியிட்டுள்ளவை ஆகும். ஃப்ரான்க்ஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மாருதி சுஸுகி தயாரித்துள்ள முதல் க்ராஸ்ஓவர் எஸ்யூவி காராகும்.

மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான டீலர்ஷிப் ஷோரூமான நெக்ஸாவின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள ஃப்ரான்க்ஸ் பிராண்டின் லைன்-அப்பில் பலேனோ ஹேட்ச்பேக் மற்றும் பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு மேலே, கிராண்ட் விட்டாரா காருக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி, ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை இன்னும் மாருதி நிறுவனம் வெளியீடு செய்யவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ஃப்ரான்க்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.

புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் காருக்கு புக்கிங் தாறுமாறா குவியுது

சிக்மா, டெல்டா, டெல்டா+, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் ஃப்ரான்க்ஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் 998சிசி டர்போ பூஸ்டர்ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 73.6 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 2,000- 4,500 ஆர்பிஎம்-இல் 147.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மற்றொரு என்ஜின் தேர்வான 1,197சிசி ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 66 கிலோவாட்ஸ் மற்றும் 4,400 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் தேர்வில் எலக்ட்ரிக் டார்க் உதவி மற்றும் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தையும் பெறலாம். ஜிம்னி வாகனத்தை பொறுத்தவரையில், இதில் எர்டிகா, எக்ஸ்.எல்6 மற்றும் பிரெஸ்ஸா கார்களில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti suzuki fronx crossover suv crosses 1500 bookings
Story first published: Wednesday, January 18, 2023, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X