ஃப்ரான்க்ஸ் பெயரில் அறிமுகமானது மாருதியின் புதிய கார்.. கூட்டம் அல மோதபோகுது! புக்கிங்கூட தொடங்கியாச்சு!

யாருமே எதிர்பார்த்திராத அட்டகாசமான ஸ்டைலில் மாருதி சுஸுகி ஓர் புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஃப்ரான்க்ஸ் எனும் புத்தம் புதிய கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023 தலைநகர் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 2 ஆம் நாளான இன்றைய தினத்தில் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக மற்றும் வருங்கால கார் மாடல்களைக் காட்சிப்படுத்தியும், விற்பனைக்கு அறிமுகம் செய்தும் வருகின்றனர்.

ஃப்ரான்க்ஸ்

புத்தம் புதிய கார்

அந்தவகையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி அதன் ஃப்ரான்க்ஸ் எனும் புத்தம் புதிய கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்ட கார் மாடல் இது ஆகும். நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் பலேனோ அடிப்படையில் ஓர் புதிய கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேய ஃப்ரான்க்ஸ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே, அந்த பலேனோ அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் மாடல் ஆகும். இதற்கு தற்போது புக்கிங்குகளும் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால், விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த விபரங்கள் வெகு விரைவில் வெளியாக உள்ளன. மாருதி சஸுகி ஃப்ரான்க்ஸ் பார்ப்பதற்கு கிராண்ட் விட்டாரா போன்றும் காட்சியளிக்கின்றது. பலேனோ அடிப்படையில் இந்த காரை உருவாக்கி இருந்தாலும், இதன் தோற்றம் சற்று மாறுபட்ட ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், கட்டுமஸ்தான தோற்றம் ஆகியவை ஃப்ரான்க்ஸை புதிய தயாரிப்பு என்பதை வெளிக்காட்டுகின்றது.

ஃப்ரான்க்ஸ்

செம்ம சூப்பரான ரூஃப்

இதற்காக புதிய வேவ் ரக க்ரில் மற்றும் ட்ரி ரக க்ரிஸ்டர் பிளாக் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க காரின் புதிய தோற்றத்திற்கு அதன் ரூஃபும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. மிகவும் அட்டகாசமான சரிவான ஸ்டைலிலான ரூஃப்லைனே இந்த காரில் காட்சியளிக்கின்றது. இத்துடன், ஃபுல் எல்இடி ஸ்வீப்பிங், கன்னக்டட் ஆர்சிஎல் உள்ளிட்டவை ஃப்ரான்க்ஸ் காருக்கு தனித்துவமான தோற்றம் வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சங்கள் ஃப்ரான்க்ஸிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையிலும் உள்ளது. இதற்காக ஃப்ரான்க்ஸில், ஜியோமெட்ரிக் பிரெசிஸன் கட் அலாய் வீல்கள், நியூ ஏஜ் ஏரோடைனமிக் டிசைன் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இந்த காரை இரு விதமான மோட்டார் தேர்வில் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கின்றன. 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் அல்லது 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் விவிடி எஞ்ஜின் ஆகிய மோட்டார் தேர்வுகளே ஃப்ரான்க்ஸில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃப்ரான்க்ஸ்

எஞ்ஜின் விபரம்

இந்த மோட்டார்களுடன் ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் எதிர்பார்க்கலாம். நல்ல மைலேஜ் மற்றும் ஸ்மூத் ரைடு அனுபவத்திற்கு ஏற்ற காராக ஃப்ரான்க்ஸ் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பேடில் ஷிஃப்டருடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

ஃப்ரான்க்ஸ் ஓர் பிரீமியம் தர கார் மாடல் என்பதால் இதன் கேபினுள் பன்முக சிறப்புகள் இடம் பெற இருக்கின்றன. மெட்டல் ஃபினிஷ் மற்றும் அக்சென்டுகளால் அலங்கரிக்கப்பட்ட டூயல் டோன் டேஷ்போர்டு, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், டிரைவருக்கான ஆர்ம் ரெஸ்ட், பின் பக்க பயணிகளுக்கும் ஏசி வெண்டுகள் மற்றும் ரியர் பகுதிக்கும் ஃபாஸ்ட் சார்ஜர் அம்சம் என எக்கசக்க அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு உள்ளன.

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோக்ராம், இஎஸ்பி மற்றும் மும்முனை இஎல்ஆர் சீட் பெல்டுகள் போன்ற பற்பல பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால் மாருதியின் இந்த தயாரிப்பு அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

இது ஓர் பிரீமியம் தர கார் பிரீமியம் அம்சங்கள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஃப்ரான்க்ஸ் காரில் 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கின்றது. இது ஓர் எச்டி திரை ஆகும். டேஷ்போர்டின் மையப் பகுதியிலேயே இது இடம் பெற்றிருக்கும். இதில், சிறப்பு வசதியாக ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவின் ஃபீட் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

கூடுதல் ஸ்பஷெல் அம்சங்கள் மற்றும் நிற தேர்வு விபரம்

இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை ஒட்டுமொத்தமாக எட்டு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வர மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. ஆர்க்டிக் ஒயிட், கிராண்டியர் கிரே, எர்தன் பிரவுன், எர்தன் பிரவுன் - ப்ளூயிஸ் பிளாக், ஒபுலண்ட் ரெட், ஒபுலண்ட் ரெட் - ப்ளூயிஸ் பிளாக், ஸ்பிளெண்டிட் சில்வர் மற்றும் ஸ்பிளெண்டிட் சில்வர் - ப்ளூயிஸ் பிளாக் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 11:14 [IST]
English summary
Maruti suzuki fronx launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X