மைலேஜை வாரி வழங்கும் விலை குறைவான மாருதி கார்! வாங்கறதுக்கு பெரிய அடிதடியே நடந்துகிட்டு இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார், நடப்பாண்டு ஏப்ரல் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மே மாத விற்பனை எண்ணிக்கை தற்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 9,683 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு நடப்பாண்டு மே மாதம்தான், விற்பனையில் முதல் முழு மாதம் ஆகும். அப்படி இருந்தாலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

Maruti Suzuki Fronx

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வருகையால், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் விற்பனை பாதிக்கப்படலாம் என ஆரம்பத்தில் பலரும் கூறி வந்தனர். ஏனெனில் மாருதி சுஸுகி பலேனோ காரின் அடிப்படையில்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனையில் இது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏனெனில் நடப்பாண்டு மே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 18,733 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு மே மாதம், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை 34.09 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே பலரும் கணித்தபடி, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வருகையால், மாருதி சுஸுகி பலேனோ காருக்கு விற்பனையில் எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படவில்லை.

Maruti Suzuki Fronx Rear Profile

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில் முதலாவது இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஹெச்பி பவர் மற்றும் 147.6 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

அதே நேரத்தில் இரண்டாவது இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், முதலாவது இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Maruti Suzuki Fronx Front Seat

மறுபக்கம் இரண்டாவது இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஃப்ரான்க்ஸ் காரும் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருடைய 1.0 லிட்டர் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் 1.2 லிட்டர் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.98 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 7.46 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலைக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், சிறப்பான ஒரு தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவேதான் முதல் மாதத்திலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் சாதித்து காட்டியுள்ளது. வரும் மாதங்களில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 12:29 [IST]
English summary
Maruti suzuki fronx may sales report price engine mileage all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X