விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃப்ரான்க்ஸ் இவ்ளோ மைலேஜ் தருமா! கேக்கும்போதே இந்த காரை வாங்கணும் போலிருக்கே

மாருதி சுஸுகி இன்னும் ஒரு சில தினங்களில் அதன் ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனையைத் தொடங்க இருக்கின்றது. இந்த கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வர இருப்பதைக் கடந்த ஜனவரி மாதத்திலேயே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அப்போதே காருக்கான முன் பதிவுகளையும் அது தொடங்கிவிட்டது.

ஆகையால், இந்த கார் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் களமிறங்கலாம் என்கிற சூழலே தற்போது இந்தியாவில் தென்படுகின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரின் மைலேஜ் திறன் பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது. இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக ஈர்க்கும் பொருட்டே இந்த தகவலை அது வெளியிட்டு இருக்கின்றது.

Maruti Fronx Mileage

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த மோட்டார்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த மோட்டார்களே அதிக மைலேஜ் தரக் கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்தும் 20.01 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை தரக் கூடியவையாக இருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரின் 5 ஸ்பீடு மேனுவல் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.79 கிமீ மைலேஜையும், இதே மோட்டாரின் ஏஎம்டி தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.89 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

Maruti Fronx Mileage

இதேபோல், இதன் 1.0 லிட்டர் பூஸ்டர்லிட் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.01 கிமீ - 21.5 கிமீ வரையில் மைலேஜ் தரும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இது மிக சிறந்த மைலேஜ் திறன் ஆகும். ஆகையால், இந்த காருக்கு கூடுதல் வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்கள், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு ஏற்கனவே 15,500க்கும் அதிகமான புக்கிங் குவிந்துவிட்டதாக தெரிவிக்கின்றன. இந்நேரம் இந்த புக்கிங் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தொட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

Maruti Fronx Mileage

இந்த நிலையிலேயே ஃப்ரான்க்ஸ் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரு மடங்காக்கும் வகையில் அந்த காரின் மைலேஜ் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி, ஃப்ரான்க்ஸை கவர்ச்சியான காராக வடிவமைத்திருக்கின்றது. கூபே கார்களில் காணப்படுவதைப் போல் இதன் பின் பகுதி தயார் செய்யப்பட்டிருப்பதே இதற்கு சான்றாக இருக்கின்றது.

தனது நியூ ஏஜ் ஏரோடைனமிக் டிசைனைப் பயன்படுத்தியே ஃப்ரான்க்ஸுக்கு இத்தகைய தோற்றத்தை மாருதி வழங்கி இருக்கின்றது. இதன் விளைவாக அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தில் ஃப்ரான்க்ஸ் காட்சியளிக்கின்றது. தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் மிக சூப்பரானதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எச்டி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதில் ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸ் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்க மாருதி சுஸுகி திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

மாருதி சுஸுகியின் இந்த புதிய தயாரிப்பிற்கு அதனுடைய மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே புக்கிங்குகள் அக்காருக்கு குவிந்துக் கொண்டிருக்கின்றது. காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னரே புக்கிங் ஃப்ரான்க்ஸுக்கு அமோகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 11:49 [IST]
English summary
Maruti suzuki fronx mileage details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+