சோதனை ஓட்டம் தீவிரம்! இந்த ரேட்டுக்கு இப்படி ஒரு காரா! போட்டி நிறுவனங்களை வெடவெடத்து போக வைத்த மாருதி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). விலை (Price) எவ்வளவு? என்பது வெகு விரைவில் அறிவிக்கப்பட்டு, புத்தம் புதிய மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரை சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் கடந்த காலங்களில் பல முறை வெளியாகியுள்ளன. இந்த சூழலில் புதிய நிறம் ஒன்றில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் தற்போது சாலையில் தென்பட்டுள்ளது.

அது ஆர்டிக் ஒயிட் நிறம் ஆகும். இந்த நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் சாலையில் சோதனை செய்யப்பட்டபோது கேமரா கண்களில் சிக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியர்கள் பொதுவாக வெள்ளை நிற கார்களை அதிக அளவில் விரும்பி வாங்க கூடியவர்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 147 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன் மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமிருக்காது.
இதன்படி 6 ஏர்பேக்குகள், ரியர் வியூ கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் சுஸுகி கனெக்ட் தொழில்நுட்பம் உள்பட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7 அல்லது 8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications







