பைக் மாதிரி மைலேஜ் தரும் டொயோட்டாவின் புதிய கார்! விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே வாங்க ரெடி ஆயிருவீங்க!

டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இந்த கூட்டணியில் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்பு மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது.

Maruti Suzuki Fronx

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. விரைவில் தொடங்கவுள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள், அதன் டொயோட்டா வெர்ஷனிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Maruti Suzuki Fronx Rear Profile

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்ட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் ஆக உள்ளது. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 100 பிஎஸ் மற்றும் 140 என்எம் ஆக இருக்கிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி (CNG) மாடல் வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டொயோட்டா வெர்ஷனிலும் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டொயோட்டா வெர்ஷன், டைசர் (Taisor) என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா டைசர் காரில் ஆரம்பத்திலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படலாம். அல்லது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் கழித்து, சிஎன்ஜி வெர்ஷன் தனியாக களமிறக்கப்படலாம். டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) காரில் தற்போது சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். சரி, டொயோட்டா டைசர் காருக்கு வருவோம். டொயோட்டா டைசர் காரில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்டெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற அதிநவீன வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவிற்கான மைலேஜை டொயோட்டா டைசர் காரும் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 7.46 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதே அளவிலான விலையில்தான் டொயோட்டா டைசர் காரும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இத்துடன் நிற்க போவதில்லை. டைசர் காரை தொடர்ந்து, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில், நடப்பு 2023ம் ஆண்டே இந்த காரும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 14:16 [IST]
English summary
Maruti suzuki fronx toyota version launch soon expected price mileage features
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+