ஃப்ரான்க்ஸ் காருல இவ்ளோ சிறப்பம்சங்களா!! இந்த பட்டியல எழுத ஒரு பேனாவோட மை போதாது போலிருக்கே!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்களின் விலைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த கூபே எஸ்யூவி ரக காரின் அறிமுகத்தை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே செய்துவிட்டநிலையில், இன்றைய தினமே அதன் விலைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. யாரும் எதிர்பார்த்திராத மலிவு விலையை ஃப்ரான்க்ஸ் காருக்கு மாருதி சுஸுகி நிர்ணயம் செய்திருக்கின்றது.

ரூ. 7.46 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து அது விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் உயர்நிலை தேர்விற்கு ரூ. 13.13 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Maruti suzuki fronx front view

பலேனோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரீமியம் கூபே எஸ்யூவி ரக கார் மாடலே இந்த ஃப்ரான்க்ஸ் ஆகும். இந்த கார் எத்தனை வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்?, ஒவ்வொரு வேரியண்டிலும் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஸீட்டா மற்றும் ஆல்பா ஆகியவை அவை ஆகும். இதன் சிக்மா வேரியண்டில் ஹாலோஜன் புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், ரூஃப் என்ட் ஸ்பாய்ளர் உள்ளிட்டவற்றை காண முடிகின்றது.

Maruti suzuki fronx side view

இதுதவிர, இரு வண்ணத்தினாலான வெளிப்புறம், ஃபேப்ரிக் இருக்கைகள், ஃப்ளாட் பாட்டாம் ஸ்டியரிங் வீல், டில்ட் அட்ஜஸ்ட் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, 60:40 எனும் நிலையில் மடித்து வைத்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆட்டோ ஏசி உள்ளிட்ட அம்சங்களும் சிக்மா தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும்.

பாதுகாப்பு வசதிகளாக இஎஸ்பி (electronic stability programme), ஹில் ஹோல்டு அசிஸ்ட், டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் டெல்டா வேரியண்டிலும் பன்முக பாதுகாப்பு அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

Maruti suzuki fronx

சிக்மா வேரியண்டில் வழங்கப்பட்டிருப்பதை போலவே இதன் பாதுகாப்பு கருவிகளின் லிஸ்ட் நீளமானதாக உள்ளது. அதேவேளையில், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் சிக்மாவை வீழ்த்தும் வகையில் உள்ளது. ஆமாங்க, இந்த தேர்வில் கூடுதல் கவர்ச்சி அம்சமாக குரோம் பூச்சுக் கொண்ட க்ரில், டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்ட ஓஆர்விஎம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), 4 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அட்டகாசமான பிரீமயிம் தர அம்ச:ங்கள் சிக்மாவைக் காட்டிலும் கூடுதலாக டெல்டா தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டெல்டா பிளஸ் வேரியண்ட்: இந்த தேர்வு டெல்டாவை மிஞ்சும் வகையில் சிறப்பு வசதிகளைத் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், கூடுதல் வசதிகளாக இந்த தேர்வில் ஆட்டோமேட்டிக் எல்இடி மல்டி ரெஃப்ளெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. டெல்டாவைக் காட்டிலும் கணிசமான அளவு கூடுதல் அம்சங்கள் டெல்டா பிளஸ்ஸில் மாருதி வழங்கி இருக்கின்றது. இதன் காரணத்தினால் இதன் விலையும் சற்று கூடுதலாகக் காட்சியளிக்கின்றது.

ஸீட்டா: பிற தேர்வுகளைக் காட்டிலும் கூடுதல் அலங்காரம் கொண்டதாக ஸீட்டா காட்சியளிக்கின்றது. இதில், லைட் பார், ரியர் பகுதியில் வைப்பர் மற்றும் வாஷர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, முன் பக்கத்தில் ஆர்ம் ரெஸ்ட், ஃபூட் வெல் இலுமினேஷன், குரோம் பிளேட்டர் இன்சைடு டூர் ஹேண்டில்கள், ரியர் வியூ கேமிரா, பக்கவாட்டு பகுதியில் கர்டைன் ரக ஏர் பேக் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் முந்தைய வேரியண்டுகளைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கும்.

இதேபோல், கூடுதல் சிறப்பு வசதிகளாக எம்ஐடி, ஒயர்லெஸ் சார்ஜர், பேடில் ஷிஃப்டர் (ஆட்டேமட்டிக் வேரியண்டில் மட்டுமே காணப்படும்), டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மென்ட் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, உயரத்தை அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, ரியர் பகுதிக்கான ஏசி வெண்ட், ஃபாஸ்ட் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், சுஸுகி கன்னெக்ட் ஆகிய அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஆல்ஃபா ட்ரிம் மேலே பார்த்த அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதும், அதிகம் பிரீமியம் வசதிகளைக் கொண்டதாகவும் ஆல்ஃபா ட்ரிம் காட்சியளிக்கின்றது. இந்த தேர்வில் 1.0 லிட்டர் டர்போ மோட்டார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்றது. ஆல்ஃபா ட்ரிம்மில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களுடன் சேர்த்து கூடுதலாக பல பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், டூயல் டோன் நிறம், கதிர் வீச்சுகளை தவிர்க்கும் கண்ணாடிகள், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் ஐஆர்விஎம், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ எலெக்ட்ரிக் ஃபோல்டபிள் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்களையே ஆல்ஃபா ட்ரிம் கூடுதலாக பெற்றிருக்கின்றது.

சிக்மா, டெல்டா ஆகிய இரு தேர்வுகளிலும் 1.2 லிட்டர் மோட்டார் தேர்வும், டெல்டா தேர்வில் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போ மோட்டார் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் வவங்கப்படுகின்றன. அதேவேளையில், ஸீட்டா தேர்வில் 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலிவு விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட காராக மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் கூபே எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அட்டகாசமான தோற்றம், பெரிய லிஸ்ட் கொண்ட சிறப்பம்சங்கள் பட்டியல் மற்றும் மலிவு விலை உள்ளிட்டவை மாருதியின் பிற தயாரிப்புகளை இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 16:30 [IST]
English summary
Maruti suzuki fronx variants and features explained
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X