சொந்த காசிலேயே சூனியம் வெச்சுகிச்சா மாருதி! இனி எல்லாரும் அந்த பக்கம் போயிருவாங்களோ!
மாருதி நிறுவனம் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரான ஃப்ரான்க்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே செக்மெண்டில் மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா என்ற காரையும் விற்பனை செய்து வருகிறது.
இந்த மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ் மற்றும் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா ஆகிய கார்கள் ஒரே செக்மெண்டில் இருப்பதால், இந்த இரண்டில் எது பெஸ்ட் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதைப் பற்றித் தான் இங்கு விரிவான காணப்போகிறோம்.

வேரியன்ட் விபரங்கள்: மாருதி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 5 வேரியன்ட்கள் உள்ளன - சிக்மா, டெல்டா, டெல்டா +, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. பிரெஸ்ஸா காரிலும் 4 வேரியன்ட்கள் உள்ளன. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, ஸிஎக்ஸ்ஐ, மற்றும் இசட்எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட்கள் உள்ளன.
இன்ஜின் விபரங்கள்: மாருதி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் 98.7 பிஎச்பி பவரையும், 147.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் 88.5 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பிரெஸ்ஸா காரில் ஒரே இன்ஜின் ஆப்ஷன் தான் உள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு, 4-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் 101.64 பிஎச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இனி இரு கார்களுக்கும் வேரியன்ட் வாரியாக விபரங்களைக் காணலாம்.
ஃப்ரான்க்ஸ் ஸிக்மா: மாருதியின் ஃப்ரான்க்ஸ் காரின் என்ட்ரி லெவல் கார் ஸிக்மா, இது ரூ7.46 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகுிறத. இதில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரெஸ்ஸா எல்எக்ஸ்ஐ: மாருதி பிரெஸ்ஸாவின் என்ட்ரி லெவல் வேரியன்டான எல்எக்ஸ்ஐ ரூ8.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது ஃப்ரான்க்ஸ் ஸிக்மா வேரியன்டை விட ரூ83 ஆயிரம் அதிகம்.
ஃப்ரான்க்ஸ் டெல்டா: ஃப்ரான்க்ஸ் டெல்டா வேரியன்டை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேவுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலையைப் பொருத்தவரை ரூ8.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ஆட்டோமெட்டிக் வேரியன்டை பொருத்தவரை ரூ8.87 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
ஃப்ரான்க்ஸ் டெல்டா +: ஃப்ரான்க்ஸ் காரில் டெல்டா + ட்ரிம் மொத்தம் 3 விதமான வேரியன்ட் கார்களை கொண்டது. இதில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்படு ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்டது. ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட காரின் விலை ரூ9.27 லட்சம். மேனுல் கியர் பாக்ஸ் கொண்ட காரின் விலை ரூ8.72 லட்சம்.
டெல்டா+ ட்ரிமில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் இருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ9.72 லட்சம்
பிரெஸ்ஸா விஎக்ஸ்ஐ: பிரெஸ்ஸா காரில் இந்த வேரியின்டிலிருந்து தான் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் இருக்கிறது. ஆட்டோமெட்டிக் கியராக இந்த காரில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விஎக்ஸ்ஐ வேரியன்ட் மேனுவல் கியரில் ரூ9.64 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ரூ11.14 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. அப்படி அப்படிப் பார்த்தால் மாருதி ஃப்ரான்க்ஸ் டர்போ மேனுவல் வேரியன்ட் காரின் விலை மாருதி பிரெஸ்ஸா விஎக்ஸ்ஐ மேனுவல் வேரியன்ட் விலையைவிட ரூ8 ஆயிரம் அதிகம்.
மாருதி ஃப்ரான்க்ஸ் ஸெட்டா: இந்த ஸெட்டா வேரியன்டில் மாருதி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கொண்டது.
ஸெட்டா வேரியன்டை பொருத்தவரை ரூ10.55 லட்சம் என்ற விலையில் மேனுவல் வேரியன்டும், 12.05 லட்சம் என்ற விலையில் ஆட்டோமெட்டிக் வேரியன்டும் விற்பனையாகி வருகிறது.
பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ: மாருதி பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ வேரியன்ட் விலையைப் பொருத்தவரை மேனுவல் வேரியன்ட் ரூ11.04 லட்சம் எனவும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ரூ12.54 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.
ஃப்ரான்க்ஸ் ஆல்ஃபா: மாருதி ஃப்ராங்க்ஸ் காரின் ஆல்ஃபா வேரியன்ட் தான் டாப் வேரியன்ட். இதில் மேனுவல் கியர் கொண்ட காரின் விலை ரூ11.47 லட்சம் எனவும், ஆட்டோமெட்டிக் கியர் கொண்ட காரின் விலை ரூ12.97 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதில் டூயல் டோன் வெர்ஷன் ஒன்றும் இருக்கிறது. இது ஆட்டோமொட்டிக், மேனுவல் கியர் கார்களில் விலையிலிருந்து ரூ16 ஆயிரம் அதிகமாக இருக்கும்.
பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ+: இசட்எக்ஸ்ஐ+ வேரியன்ட் தான் பிரெஸ்ஸா காரின் டாப் வேரியன்ட், இதன் மேனுவல் கியர் கார் ரூ12.48 லட்சம் என்ற விலையிலும், ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்ட் கார் ரூ13.98 லட்சம் என்ற விலையிலும், விலையிலும் விற்பனையாகிறது. இதை ஒப்பிட்டுப் பார்த்தால் பிரெஸ்ஸா காரின் டாப் மாடல் விலை ஃப்ரான்க்காரின் டாப் மாடல் விலையை விட ரூ1.01 லட்சம் அதிகமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் பிரெஸ்ஸாவை விட ஃப்ரான்க்ஸ் கார் தான், குறைவான விலையில் விற்பனையாகிறது. அதே நேரம் ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு தற்போது வந்துள்ளதால் சில காலங்களுக்கு ஃப்ரான்க்ஸ் கார் அலை மார்கெட்டில் வீசுமென்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பிரெஸ்ஸா காரின் பூட் ஸ்பேஸ் ஃப்ரான்க்ஸ் காரை விட 20 லிட்டர் அதிகமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய தேவை உள்ளது.


Click it and Unblock the Notifications









