இவ்ளோ மைலேஜ் தருதா! மாருதியின் புதிய காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்! எப்படியாச்சும் ஒன்னு வாங்கீரணும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட் சைஸ் எஸ்யூவி (Mid Size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இது மிகவும் சவால் நிறைந்த ஒரு செக்மெண்ட்.
ஏனெனில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஹோண்டா எலவேட் (Honda Elevate) உள்ளிட்ட கார்கள் இந்த செக்மெண்ட்டில்தான் இருக்கின்றன. இதில், ஹோண்டா எலவேட் சந்தைக்கு புதுவரவு ஆகும்.

இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காருடனும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மல்லுக்கட்டி வருகிறது. ஆனால் இவ்வளவு போட்டிகளையும் சாமர்த்தியமாக சமாளித்து, விற்பனையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா வெற்றி கொடி நட்டு கொண்டுள்ளது.
ஆம், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 1 வருடம் மட்டுமே கடந்துள்ள நிலையில், மிகப்பெரிய சாதனை ஒன்றை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா படைத்துள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் விற்பனைக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள்ளாக 1 லட்சம் பேர் இந்த காரை வாங்கி விட்டனர். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாருதி சுஸுகி நிறுவனம் மொத்தம் 99,317 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்திருந்தது.
இந்த எண்ணிக்கை, நடப்பு செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே, 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்து விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் வெற்றிக்கு, அதன் மைலேஜ் (Mileage) மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol), 1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் சிஎன்ஜி (CNG) இன்ஜின்கள் ஆகும்.
இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், மேனுவல் ஆல் வீல் டிரைவ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் 1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன், சரியான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 10.70 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இந்த காரில் ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாராவை மாற்றியுள்ளன. எதிர்காலத்தில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா விற்பனையில் இன்னும் பல புதிய சாதனைகளை படைக்கலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








