போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட்-சைஸ் (Mid-size SUV) எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் சவால் நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், பல்வேறு கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போட்டியிட்டு வருகிறது.

இதில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்கள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த சூழலில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி (CNG) மாடல், நடப்பு ஜனவரி மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!

மைலேஜை வாரி வழங்கும்!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் கே15 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது அதிகபட்சமாக 88 ஹெச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 ஹெச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!

இந்த காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரில் வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. வசதிகளை பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 4 ஏர்பேக்குகள், முழு எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்த விலைக்கு அருமையான கார்!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரானது, டெல்டா மற்றும் ஜெட்டா என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், டெல்டா வேரியண்ட்டின் விலை 12.85 லட்ச ரூபாய் ஆகவும், ஜெட்டா வேரியண்ட்டின் விலை 14.84 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார் மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

ஷோரூம்களுக்கு வர தொடங்கீருச்சு!

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார்கள் தற்போது வர தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காருக்கு, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரும் தற்போதுதான் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.

பிரெஸ்ஸா சிஎன்ஜி எப்போ?

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த புதிய மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy

More from DriveSpark

Article Published On: Tuesday, January 31, 2023, 14:01 [IST]
English summary
Maruti suzuki grand vitara cng arrives at dealerships check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+