திடீரென விலை கூடிய மாருதி கிராண்ட் விட்டாரா கார்!இப்படி ஒரு வசதியை கொண்டு வந்தது தான் இதுக்கு காரணம்
மாருதி சுஸூகி நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் காம்பேக்ட் எஸ்யூவி காரான கிராண்ட் விட்டாரா காரின் விலையை உயர்த்தி உள்ளது. அனைத்து ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்ட்களின் விலை ரூபாய் 4,000 வரை அதிகரித்துள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இந்த விளைவு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் பெரும்பாலான கார்கள் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்து மிகப் பெரிய அளவிலான விற்பனையை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் மாருதி நிறுவனம் பழைய நிறுவனத்துடன் கூட்டணி வைத்தது.

இந்த கூட்டணியில் உருவான பல கார்களில் கிராண்டு விட்டாரா காரும் ஒன்று. இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த காரை அடிப்படையாக வைத்து தான் டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த கிராண்ட் விட்டாரா காரின் ஹைபிரிட் வேரியன்டில் மட்டும் புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அக்கோஸ்டிக் வெகிஹிள் அலர்ட் சிஸ்டம் என்ற கருவியை பொருத்தியுள்ளது. இதனால் இந்த காரின் விலை ரூபாய் 4000 வரை அதிகரித்துள்ளது.

கிராண்ட் விட்டாரா காரில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அம்சம் வரப்போகும் வாகன சேஃப்டி ஒழுங்கு சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் ஒரு பாதுகாப்பு கருவி ஆகும். பெட்ரோல் மட்டும் உள்ள காருக்கு இது தேவையில்லை.
பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்கள் சத்தமே இல்லாமல் அமைதியாக பயணிக்கும் திறன் கொண்டது. ஆனால் சிட்டிக்குள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் இந்த சத்தமில்லாத கார் சத்தம் இல்லாத காரணத்தாலேயே விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சாலையில் நடந்து செல்பவர்கள் சைக்கிள் செல்பவர்கள் குழந்தைகள் பலர் இந்த காரில் விபத்திற்குள்ளாக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் இந்த ஏவிஏஎஸ் (AVAS) எனப்படும் சிஸ்டம் கார் அமைதியாக செல்லும்போது கார் முன்னே சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் இதனால் கார் வரும் சத்தம் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு கேட்கும். கிராண்ட் விட்டாரா ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் காரை பொறுத்தவரை எலெக்ட்ரிக் ஒன்லி மோடில் போட்டு இயக்க முடியும்.
அப்படியே இருக்கும் போது இந்த காரில் இருந்து சத்தமே வராது காரில் உள்ள பேட்டரி திறனில் மட்டுமே கார் இயங்கும். இந்த நேரத்தில் அருகில் இருப்பவர்களை உஷார் படுத்த காரில் இந்த சிஸ்டம் தானாக இயங்கி விடும் இதிலிருந்து கார் வரும் சத்தம் அங்கு இருப்பவர்களுக்கு கேட்கும்.
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரின் விலை தற்போது உயர்த்தப்பட்ட பின்பு அதன் ஹைபிரிட் வேரியன்ட் ரூ 18.29 லட்சம் முதல் ரூ 19.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் விற்பனைக்கு அறிமுகமானது மொத்தம் நான்கு வேரியன்ட்களில் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரண்டு ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு அறிமுகமானது .
தற்போது இந்த காரின் செக்மெண்டிலேயே முதல்முறையாக சிஎன்ஜி ஆப்ஷன் உள்ள காராக அறிமுகமானது. இந்த காரின் இஞ்சினை பொருத்தவரை கே சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 99 பிஹெச்பி பவரையும் 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்ராங் ஹைபிரிட் வேரியன்டிற்கு இசிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இஞ்சின் சிஎன்ஜி வெர்ஷனில் 86.63 பிஎச்பி பவரையும் 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களுக்கு விலை அதிகம் செய்யப்பட்டதற்கு காரணமாக புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டது தான் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு அம்சம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கட்டாயமாகப்படும் சூழ்நிலை வருவதால் இதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் விலை ஒன்றும் மிகப்பெரிய அளவில் அதிகம் ஆகவில்லை என்பதால் இது விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









