சிவனும், சக்தியும் சேந்தா மாஸுடா! போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி-டொயோட்டா கூட்டணி! சம்பவம் லோடிங்!
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய 2 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களும் இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
விற்பனைக்கு வந்த உடனேயே இந்த 2 கார்களும், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற மிக முக்கியமான போட்டியாளர்களுக்கு விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்த 2 கார்களும் ஒட்டுமொத்தமாக 12,856 என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து போட்டி மாடல்களை எல்லாம் கதிகலங்க வைத்துள்ளன.

தனித்தனியா எவ்ளோனு சொல்லுங்க!
இதில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனை எண்ணிக்கை மட்டும் 8,662 ஆகும். அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 4,194 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரானது, சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்பா, ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் என மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபக்கம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரானது E, S, G, V என மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 103 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர 115 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

2 கார்லயும் 'சேம்' இன்ஜின்!
இதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். புதிய மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
விலை எவ்ளோங்க?
இதில், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 10.45 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
மறுபக்கம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.48 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களுமே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை.
சம்பவம் லோடிங்!
கூட்டணி இருப்பதால், இந்த 2 நிறுவனங்களும் வரும் காலங்களில் நிறைய கார்களை பரிமாறி கொள்ளவுள்ளன. இதன்படி டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரையும், மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரையும் தங்களது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








