மாருதி கார்களில் இப்படி ஒரு பிரச்னையா! இப்பதான் வெளிய தெரிஞ்சிருக்கு! அதிர்ச்சியில் உரிமையாளர்கள்

மாருதி சுஸூகி நிறுவனம் தனது 87,599 வாகனங்களை ஸ்டேரிங் பிரச்சினை காரணமாக திரும்ப சர்வீஸ் சென்டர்களுக்கு அழைத்துள்ளது. இந்த பட்டியலில் நீங்கள் வைத்திருக்கும் கார் இருக்கிறதா? ஸ்டியரிங்கில் அப்படி என்னதான் பிரச்சினை? இது குறித்த தெளிவான தகவல்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது மாருதி. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாகனங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்தின் மீது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான நம்பிக்கை இருக்கிறது. குறைவான விலையில் கார்களை அறிமுகப்படுத்தியது மூலம் மாருதி நிறுவனம் இந்திய மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

maruti recall

இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது கார்களை ஸ்டேரிங் டை ராடில் பிரச்சினை காரணமாக திரும்ப அழைத்துள்ளது. இதற்காக குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை யார் வாங்கியுள்ளார்களோ அதன் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று செக் அப் செய்து கொள்ள திரும்ப அழைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை மாருதி நிறுவனம் தயாரித்த எக்ஸ்பிரஸ் மற்றும் ஈகோ ஆகிய மாடல் கார்களின் இப்படியாக ஸ்டேரிங் பிரச்சனை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

maruti recall

இது குறித்து மாருதி நிறுவனம் அளித்த அறிக்கையின் படி ஸ்டேரிங் தைராய்டில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது என்றும் சில கார்களில் இப்படியான பிரச்சினைகளை இருக்கலாம் என்றும் மாருதி நிறுவனம் சந்தேகிக்கிறது. இந்த பிரச்சனை இருக்கும் வாகனங்களில் ஸ்டியரிங் மற்றும் ஹேண்டில் லிங்கில் பிரச்சனை இருக்கும்.

இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மாருதி நிறுவனம் மேல் குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப மாருதி ஷோரூமிற்கு அழைத்து இந்த பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பதை செக் செய்கிறது. பிரச்சனை இருந்தால் சரி செய்தும் தர முடிவு செய்துள்ளது. இதற்காக அனைவருக்கும் மாருதி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

maruti recall

திரும்ப அழைக்கப்படும் கார்களில் பிரச்சனை இருந்தால் அதை இலவசமாகவே மாருதி நிறுவனம் சரி செய்து கொடுக்கிறது. பிரச்சனை இல்லாத கார்களில் இந்த விதமான பிரச்சினையும் இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கப்பட்டு அந்த கார் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இது நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துவிட்டது. உங்கள் கார் இப்படியான காலகட்டத்தில் நீங்கள் தயாரிக்கப்பட்ட காராக இருந்தால் நீங்கள் உடனடியாக அருகிஙல் உள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு சென்று உங்கள் காரை செக் செய்து கொள்வது தான் சிறந்தது.

மாருதி நிறுவனம் தனது எஸ்பிரஸ்ஸோ காரை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தியது. இதில் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஐடியல் ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான் இது 25.3 கிலோமீட்டர் மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது.

இந்த காரில் டூயல் ஏர்பக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் ஹில் அசிஸ்டன்ட் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியன இருக்கிறது. இதில் எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி புரோகிராமை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் அனைத்து வேரியன்ட்களிலும் இருக்கிறது.

மாருதி ஈகோ காரை பொறுத்தவரை கடந்த 2022 ஆம் ஆண்டு தான் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது ஒரு எம்பிவி ரக காராகும் இந்த கார் ரூபாய் 5.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மொத்தம் 13 வேரியன்ட்கள் உள்ளன. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய லேஅவுட்டிலும், கார்கோ, டூர், ஆம்புலன்ஸ் ஆகிய வெர்ஷன்களிலும் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இதில் பல்வேறு ஆய்வுகளும் பலரின் உழைப்புகளும் இருக்கிறது. அதில் சில பிரச்சனைகள் ஏற்படும் போது இப்படியாக திரும்ப அழைக்கப்பட்டு சரி செய்கின்றனர். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அசால்டாக இருக்காமல் தங்கள் காரில் இந்த பிரச்சனை இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும்.

Article Published On: Tuesday, July 25, 2023, 14:23 [IST]
English summary
Maruti suzuki has issued a recall for 87 599 units of s presso and eeco to address a defective steer
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X