மாருதி சுஸுகி கிட்ட எத்தனை ஃபேக்ட்ரி இருந்தாலும் இந்த பிரச்சனை ஓயாது!! பலாப்பழத்தில் ஈ போல் மொய்க்கிறாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு அடுத்த 2024 ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவிரி செய்ய சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான கார்களுக்கான ஆர்டர்கள் பெண்டிங்கில் இருப்பதாக ஓர் அதிர்ச்சிக்கர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அது என்ன? இந்த பெண்டிங்குகளை மாருதி சுஸுகி கிளீயர் செய்யுமா? தற்சமயம் ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை கார்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்கிறது? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம் மாருதி சுஸுகி. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான இது ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் கூட கிட்டத்தட்ட 2 இலட்ச கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் புள்ளி விபரங்களுடன் கூறியிருந்தோம்.

maruti suzuki 2.08 lakhs pending orders

இவ்வாறு, அதிக கஸ்டமர்ஸ் தேடி வரும் நிறுவனம் என்றாலே அந்த நிறுவனத்துக்கான கடமையும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் மாருதி சுஸுகியும் தினந்தோறும் கால்களில் சக்கரங்களை கட்டிக் கொண்டு, பம்பரம் போல் சுழலக்கூடிய நிறுவனம் ஆகும். கடந்த அக்டோபரில் மட்டும் சுமார் 1.73 இலட்ச கார்களை உற்பத்தி செய்து மற்ற கார் நிறுவனங்கள் அனைத்தையும் மலைக்க வைத்துள்ளது.

இருப்பினும், விற்பனை கிட்டத்தட்ட 2 இலட்சம் என்ற அளவில் இருப்பதால், மாதத்திற்கு 1.73 இலட்ச கார்கள் என்ற அளவில் உற்பத்தி செய்தாலும் மாருதி சுஸுகி நிறுவனத்தால் டிமெண்ட்டை சமாளிக்க முடியவில்லை. இதனால், மாருதி சுஸுகியின் ஒரு சில கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கில் கூட டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

maruti suzuki 2.08 lakhs pending orders

ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கிய நடப்பு 2023-24 நிதியாண்டில் மாருதி சுஸுகி டெலிவிரி செய்ய வேண்டிய கார்களின் எண்ணிக்கை 2.08 இலட்சமாக தற்சமயம் உள்ளது. அதாவது, இன்னும் 2 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு டெலிவிரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி உள்ளது.

2.08 இலட்ச கார்களுக்கான ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருப்பது மிக அதிகம் என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மையில் கடந்த சில மாதங்களில் பெண்டிங் ஆர்டர்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் ஏறக்குறைய 3.55 இலட்ச வாகனங்களுக்கான ஆர்டர்களை மாருதி சுஸுகி பெண்டிங்கில் வைத்திருந்தது.

maruti suzuki 2.08 lakhs pending orders

தற்சமயம், மாருதி சுஸுகி நிறுவனம் கஸ்டமர்ஸுக்கு டெலிவிரி செய்ய அதிகம் பெண்டிங் வைத்திருப்பது எர்டிகா காருக்கு ஆகும். இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காரான மாருதி சுஸுகி எர்டிகாவை தற்போதைக்கு சுமார் ஏறக்குறைய 93,000 பேர் முன்பதிவு செய்துவிட்டு, டெலிவிரிக்காக காத்திருக்கின்றனர். இதற்கடுத்து, பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா கார்கள் அடுத்தடுத்து உள்ளன.

இதில், பிரெஸ்ஸா கார்களுக்கு ஏறக்குறைய 48,000 ஆர்டர்களும், கிராண்ட் விட்டாராவுக்கு 27,000 ஆர்டர்களும் பெண்டிங்கில் உள்ளன. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில், அதிகரித்துவரும் ஆர்டர்களை சமாளிக்கவும், கஸ்டமர்ஸ் காரை முன்பதிவு செய்துவிட்டு டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவை குறைப்பதற்காகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மாருதி சுஸுகி அறிவித்தது.

maruti suzuki 2.08 lakhs pending orders

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆர்டர் பெண்டிங்குகளை குறைக்க போவதாக தெரிவித்தது மட்டுமின்றி, அதற்கான முயற்சிகளிலும் மாருதி சுஸுகி நிறுவனம் உடனடியாக இறங்கியதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இதன்படி, வாகனங்களை உருவாக்குவதற்கு தேவையான குறைக்கடத்திகள் மற்றும் சிஎன்ஜி-சார்ந்த பாகங்களின் விநியோகங்களை மாருதி சுஸுகி துரிதப்படுத்தியது. இதனால்தான், 3.55 இலட்சத்தில் இருந்து 2 மாதங்களில் 2.08 இலட்சமாக பெண்டிங் ஆர்டர்களை மாருதி சுஸுகியால் குறைக்க முடிந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 23:59 [IST]
English summary
Maruti suzuki has over 2 08 lakhs pending orders check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X