டாடா வயிற்றில் புளியைக் கரைக்கும் மாருதி! 2030-குள்ள இந்த விஷயத்தைச் செஞ்ச ஆகனும்னு கங்கணம் கட்டிட்டாங்க!
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் ரூ45 ஆயிரம் கோடி பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் தயாரிப்பு திறனை அடுத்த 7 ஆண்டுகளில் இரு மடங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவிலேயே அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்த கிட்டதட்ட அனைத்து தயாரிப்புகளுமே மார்கெட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது மாருதி நிறுவனம் இந்தியாவில் 2 இடங்களில் தனது தயாரிப்பு ஆலையை நிறுவி கார்களை உற்பத்தி செய்து வருகிறது. கூர்கானில் உள்ள மானேசர் மற்றும் குஜராத்தில் உள்ள மஹேசானா ஆகிய பகுதிகளில் தனது உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இந்த இரண்டு ஆலைகளையும் சேர்த்து தற்போது ஆண்டிற்கு 20 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாகி வருவதால் தனது உற்பத்தியை அதிகரிக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் 2 புதிய ஆலைகளை அமைக்கவும் முடிவு செய்தது. அதன்படி ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் தனது ஆலையை அமைத்துள்ளது. இங்குத் தனது முதல் யூனிட்டை கட்டமைக்கும் பணியை மாருதி சுஸூகி நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது.

இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவிற்குள் புதிதாக ரூ45 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் தன் உற்பத்தியை வரும் 2024ம் ஆண்டிற்குள் இரு மடங்களாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள மார்கெட் பங்கை உயர்த்தவும், வெளிநாட்டு ஏற்றுமதியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது கார்கோடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஆலையில் ஆண்டிற்கு 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த ஆலை முழு செயல்பாட்டிற்கு வரும் போது உற்பத்தித் திறன் 30 லட்சம் கார்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்ல இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதியை ஆண்டிற்கு 10 லட்சம் கார்களாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.

40 லட்சம் என்பது அடுத்த 7 ஆண்டு இலக்காக இருக்கும் நிலையில் தற்போது அந்நிறுவனம் 41 சதவீத மார்க்கெட் பங்கை வகித்துள்ளது. இது 50 சதவீதமாக மாறும் போது அடுத்த ஆலை மற்றும் உற்பத்தித் திறன் குறித்துத் திட்டமிடப்படும் என அந்நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார். இதற்காகத் தான் இந்நிறுவனம் வரிசையாக எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. தற்போது ஆண்டிற்கு 2.59 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சமாக மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் சமீபத்திய தரவுகள் வருங்காலத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கான மிகப்பெரிய வாய்ப்பை வெளிகாட்டுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த தற்போது மாருதி மட்டுமல்லாமல் எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு இவை எல்லாம் முக்கியமான அறிகுறிகள்.


Click it and Unblock the Notifications









