2 கார் செய்யற வேலையை இது ஒன்னே செஞ்சிரும்! மார்க்கெட்டை தலைகீழா திருப்பி போடப்போகும் மாருதியின் புது தயாரிப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV)ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நெக்ஸா (Nexa) டீலர்ஷிப்கள் மூலமாக, 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, இன்விக்டோ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின், ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

Maruti Suzuki Invicto Bookings Open

இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருப்பதால், கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், வித்தியாசமான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பம்பரும் சற்றே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஹெட்லைட், தனித்துவமான அலாய் வீல் டிசைன் ஆகியவையும், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விஷயங்கள் ஆகும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இடம்பெற்றுள்ள ஒரு சில வசதிகளும் (Features) கைவிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toyota Innova Hycross

இதன்படி மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதி வழங்கப்படுவது தவிர்க்கப்படலாம். அல்லது அடாஸ் தொகுப்பின் ஒரு சில வசதிகள் மட்டும் கைவிடப்படலாம். செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி டாப் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் (Strong-hybrid) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ஆரம்ப நிலை வேரியண்ட்களில், 2.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். இதில், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனின் மைலேஜ் (Mileage), ஒரு கிலோவிற்கு 24 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது அளவில் பெரிய கார் ஆகும். கிட்டத்தட்ட 2 குடும்பங்கள் ஒரே காரில் செல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு கார் இவ்வளவு மைலேஜ் வழங்குவது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான். மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த கேள்விக்கு வரும் ஜூலை 5ம் தேதி நமக்கு விடை கிடைத்து விடும்.

அன்றைய தினம்தான் மாருதி சுஸுகி நிறுவனம் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு இன்னும் சுமார் 2 வார காலம் மட்டுமே உள்ளதால், மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்காக காத்து கொண்டிருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டே செல்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் கியா கார்னிவல் (Kia Carnival) ஆகிய கார்களுக்கு சிறந்த மாற்றாக மாருதி சுஸுகி இன்விக்டோ இருக்கலாம். இதில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை விட குறைவான விலையில், மாருதி சுஸுகி இன்விக்டோ வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 16:34 [IST]
English summary
Maruti suzuki invicto bookings open features engine mileage launch date
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+