8 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! இதுக்கு முன்னாடி டூவீலர்களே கைகட்டிதான் நிக்கணும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி இன்விக்டோ கார் (Maruti Suzuki Invicto), கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் இதன் முதல் மாத விற்பனை நிலவரம் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

இதன்படி முதல் மாதத்திலேயே மாருதி சுஸுகி இன்விக்டோ காரை 750 பேர் வாங்கியுள்ளனர். மாருதி சுஸுகி இன்விக்டோ கார் மிகவும் விலை உயர்ந்த காராக இருக்கும் சூழலில், இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இது ட்ரெய்லர் மட்டும்தான். மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது.

Maruti Suzuki Invicto

ஏனெனில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு (Booking) செய்துள்ளனர். எனவே வரும் மாதங்களில், மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

மாருதி-டொயோட்டா கூட்டணியின் மூலம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் ஆரம்ப விலை 24.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 28.42 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Maruti Suzuki Invicto Rear Design

மாருதி சுஸுகி இன்விக்டோ காரை நீங்கள் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் வாங்கலாம். ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 151 பிஹெச்பி மற்றும் 188 என்எம் டார்க் திறன் ஆகும்.

இதன் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. இதே இன்ஜின்தான் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிலும் வழங்கப்படுகிறது.

ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், ஹைப்ரிட் அல்லாத இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விலை உயர்ந்ததாக இருக்கும் சூழலில், அதற்கேற்ப நிறைய வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பனரோமின் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆனால் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் அடாஸ் தொழில்நுட்ப வசதி இல்லை. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இந்த வசதி இருக்கிறது.

எனினும் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் (Safety Features), கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சௌகரியமான மற்றும் சொகுசான பயணம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி இன்விக்டோ சரியான ஆப்ஷனாக இருக்கலாம். அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன், ஹைப்ரிட் கார் என்பதால் அட்டகாசமான மைலேஜ் கிடைப்பது மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 13:39 [IST]
English summary
Maruti suzuki invicto first month sales report and booking details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+