இந்த மைலேஜ் எல்லாரையும் அடிமையாக்க போகுது! நாடே காத்து கிடக்கும் மாருதி காரை நாளைக்கு லான்ச் பண்றாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பிரீமியம் எம்பிவி ரக கார் ஆகும்.

இந்த கார், மாருதி சுஸுகி எங்கேஜ் (Maruti Suzuki Engage) என்ற பெயரில்தான் விற்பனைக்கு வரும் என முதலில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாருதி சுஸுகி இன்விக்டோ என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படவிருப்பது பின்னர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.

Maruti Suzuki Invicto

புத்தம் புதிய மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மாருதி சுஸுகி இன்விக்டோ காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த சூழலில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார், இந்திய சந்தையில் நாளை (ஜூலை 5) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாளை நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில், மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதை தெரிந்து கொள்வதற்காகவே பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Maruti Invicto

டிசைனை (Design) பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ சற்று வித்தியாசமானதாக இருக்கும். புதிய க்ரில் அமைப்பு, முன் மற்றும் பின் பகுதியில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்கள், சிறிய எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் இடம்பெற்றிருக்கும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஒருவேளை அடாஸ் வசதி வழங்கப்படாவிட்டால், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை விட, மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை ஓரளவிற்கு குறைவாக இருக்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) தொழில்நுட்பத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம்.

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 24 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இந்திய வாடிக்கையாளர்களை கவரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். உருவத்தில் பெரிய காராக இருக்கும் நிலையில், இந்த அளவிற்கு மைலேஜ் வழங்கினால், அது மாருதி சுஸுகி இன்விக்டோவின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக அமையலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக உறுப்பினர்களை கொண்ட, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி இன்விக்டோ ஏற்ற காராக இருக்கும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் டெலிவரி தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 4, 2023, 17:30 [IST]
English summary
Maruti suzuki invicto launch tomorrow what we know so far
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+