அதிகம் மைலேஜ் தரும் காராக மட்டுமே வருகிறது மாருதி இன்விக்டோ.. இன்னோவாவிற்கு சமாதி கட்ட தயாராக வேண்டியதுதான்!
மாருதி சுஸுகி வெகு விரைவில் இன்விக்டோ எனும் புதிய காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. டொயோட்டாவின் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான இன்னோவா ஹைகிராஸை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் கார் மாடல் இதுவாகும். இதை இன்னோவா ஹைகிராஸின் ரீ-பேட்ஜ் மாடல் என்றும் கூறலாம்.
இதைதான் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. இந்தியாவில் எம்பிவி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவை உள்ளன. இவையே இந்தியாவின் எம்பிவி கார்கள் பிரிவில் மிக அமோக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரிசையிலேயே புதிதாக இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்விக்டோவை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி இன்விக்டோ வெறும் ஹைபிரிட் வெர்ஷனில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸும் இந்தியாவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகியும் இதே மாதிரியான முடிவை எடுத்திருக்கின்றது. இந்த மோட்டார் மிக அதிக மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ வரை மைலேஜை எதிர்பார்க்கலாம். இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ் மாடலாக இன்விக்டோ இருந்தாலும் நிறைய தோற்ற மாற்றங்களைக் கொண்டதாக மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது.
அதாவது, ஹைகிராஸை உறித்து வைத்ததை போல் இன்விக்டோவின் வெளி மற்றும் உட்புறம் இருந்தாலும், கணிசமான அணிகலன் மாற்றங்களை இதில் மாருதி சுஸுகி செய்து இருக்கின்றது. புதிய கிரில், மாருதி சுஸுகி மற்றும் இன்விக்டோ எனும் பேட்ஜ் உள்ளிட்டவை மாற்றங்களுக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
2.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே இன்விக்டோவில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுமும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் இன்விக்டோவில் வழங்கப்பட இருக்கின்றது. ஆகையால், இன்னோவா ஹைகிராஸுக்கு இது மிகப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி இன்விக்டோவை அதிகம் மைலேஜ் தரும் காராக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக இட வசதி, மிக அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் பாரிய உருவம் என எக்கசக்க சிறப்புகளுடன் இந்த கார் விற்பனைக்குத் தயாராகி வருகின்றது. இதன் காரணத்தினாலேயே இப்போதே இந்த காரை இந்தியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்க தொடங்கிவிட்டனர். ஜூலை 5ஆம் தேதி இந்த காரின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








