நாடே காத்து கிடக்கும் மாருதி சுஸுகி கார் குறைவான விலையில் வரப்போகுதா! எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார், வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக இன்விக்டோ கார் விற்பனை செய்யப்படவுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மாருதி சுஸுகி இன்விக்டோ காரை தற்போது முன்பதிவு (Bookings) செய்து கொள்ளலாம்.

Maruti Invicto

வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அதே மாதத்தில் இருந்து மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு நன்றாக தெரியும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் டிசைனில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் மட்டும்தான், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Maruti Suzuki Invicto

மேலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில வசதிகள், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் இடம்பெறாமல் போகலாம். முக்கியமாக மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடாஸ் வசதி வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடாஸ் தொகுப்பில், ஆட்டோமேட்டிக் ஹைபீம் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், எதுவுமே மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் வழங்கப்படாமல் போகலாம்.

அல்லது அடாஸ் தொகுப்பின் ஒரு சில வசதிகள் மட்டும் வழங்கப்படலாம். இதன் காரணமாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாருதி சுஸுகி இன்விக்டோ காரை, டொயோட்டா நிறுவனம்தான் உற்பத்தி செய்து வழங்குகிறது.

பெங்களூருக்கு அருகே உள்ள பிடதி பகுதியில் டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குதான் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் சேர்த்து, மாருதி சுஸுகி இன்விக்டோ காரும் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால் அடாஸ் போன்ற வசதிகள் குறைவாக வழங்கப்படுவதன் காரணமாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை குறைவாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல், எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் வரும் ஜூலை 5ம் தேதி நமக்கு பதில் கிடைத்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ குறைவான விலையில் வந்தால், நிச்சயம் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும். ஆனால் வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், நம்மால் எதையும் உறுதியாக சொல்ல முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 23:48 [IST]
English summary
Maruti suzuki invicto new details out launch soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+