மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். டொயோட்டா உடனான கூட்டணியின் அடிப்படையில், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை களமிறக்கியுள்ளது.

மாருதி சுஸுகி இன்விக்டோ கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 24.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 28.42 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Maruti Suzuki Invicto

இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை இன்விக்டோ பெற்றுள்ளது. ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் என மாருதி சுஸுகி இன்விக்டோ கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். அதே நேரத்தில் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் அதிகாரப்பூர்வமான டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் மாருதி சுஸுகி இன்விக்டோ காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Invicto Rear Design

இது 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதிக பேர் பயணம் செய்யக்கூடிய மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் உடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் கனெக்ட்டிவிட்டி மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 360 டிகிரி கேமரா, முன் பக்க பார்க்கிங் சென்சார்கள், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் சுஸுகி கனெக்டட் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி இன்விக்டோ காரை தொடர்ந்து, இந்த கூட்டணியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ள கார் டொயோட்டா ரூமியான். இது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீ-பேட்ஜ் வெர்ஷன் ஆகும். வெளிநாடுகளில் ஏற்கனவே டொயோட்டா ரூமியான் கார் விற்பனையில் உள்ளது. இதை தொடர்ந்து, இந்திய சந்தையிலும் டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதம் டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போன்று இதுவும் அதிக பேர் பயணம் செய்யக்கூடிய எம்பிவி கார்தான். ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட குறைவான விலையில், டொயோட்டா ரூமியான் விற்பனைக்கு வரவுள்ளது.

எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு எம்பிவி காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, டொயோட்டா ரூமியான் கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். எனவே இந்த காரும் அதிக மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 23:58 [IST]
English summary
Maruti suzuki invicto official delivery all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+