இந்த மாருதி சுஸுகி காரை தேடி தான் எல்லாரும் குவிய போறாங்க!! டொயோட்டாவுக்கு தலைவலி ஸ்டார்ட்

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்விக்டோ எம்பிவி கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸின் அடிப்படையில் இந்த புதிய மாருதி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னோவா ஹைகிராஸ் உடன் ஒப்பிடுகையில் சில வேறுப்பாடுகள் புதிய இன்விக்டோ காரில் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

விலை: இந்த இரு கார்களை பற்றிய மற்ற விபரங்களை பார்ப்பதற்கு முன்னால், இவற்றின் விலைகளை பார்ப்போம். ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.79 லட்சத்தில் இருந்து ரூ.28.42 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.55 லட்சத்தில் இருந்து ரூ.29.99 லட்சம் வரையில் உள்ளன.

maruti suzuki invicto vs toyota innova hycross

இவற்றின்படி பார்க்கும்போது, இன்விக்டோவை காட்டிலும் இன்னோவா ஹைகிராஸ் குறைந்த விலையிலேயே கிடைக்கும். இதற்கு காரணம், ஹைகிராஸ் கார் பெட்ரோல்-ஒன்லி மற்றும் பெட்ரோல்-எலக்ட்ரிக் ஹைப்ரீட் என 2 விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால் புதிய இன்விக்டோவை மாருதி சுஸுகி நிறுவனம் ஹைப்ரீட் தேர்வில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவொரு காரும் ஹைப்ரீட் என்ஜின் உடன் விலைமிக்கவையாக இருப்பது வழக்கமே.

என்ஜின் & கியர்பாக்ஸ்: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் செட்அப் தான் இன்விக்டோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 184 எச்பி மற்றும் 205 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஹைப்ரீட் பவர்டிரெயின் செட்அப் உடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

maruti suzuki invicto vs toyota innova hycross

ஏற்கனவே கூறியதுபோல், இன்னோவா ஹைகிராஸ் கார் ஆனது ஹைப்ரீட் அல்லாத 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடனும் கிடைக்கிறது. இந்த பெட்ரோல் என்ஜின் மூலமாக மட்டும் 172 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இன்னோவா ஹைகிராஸ் காரில் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்களில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மைலேஜ்: இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதுமே வாகனத்தின் மைலேஜ் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவர் என்பது நமக்கு தெரியும். இதனை நன்கு புரிந்துக்கொண்ட ஜப்பானிய நிறுவனங்களான சுஸுகி, டொயோட்டா இந்தியாவில் அவற்றின் கார்களை நன்கு மைலேஜ் உடன் வழங்க முயற்சித்துள்ளன. அந்த வரிசையில், இவற்றின் இன்விக்டோ மற்றும் இன்னோவா ஹைகிராஸ் கார்களும் சிறப்பான மைலேஜை வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

maruti suzuki invicto vs toyota innova hycross

மாருதி சுஸுகி இன்விக்டோ மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்களின் ஹைப்ரீட் வேரியண்ட்களில் நகர்புறத்திற்குள் 18kmpl வரையிலான மைலேஜையும், ஹைவேயில் 22kmpl வரையிலான மைலேஜையும் பெறலாம். இந்த ஹைப்ரீட் கார்களில் அதிகப்பட்சமாக 23.24kmpl வரையில் மைலேஜை பெறலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் வேரியண்ட்களில் நகர்புறத்தில் 12kmpl வரையிலும், ஹைவேயில் 15kmpl வரையிலும் மட்டுமே மைலேஜ் கிடைக்கிறது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்த இரு எம்பிவி கார்களிலும் 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 7 பேர் வரையில் இந்த எம்பிவி காரில் தாராளமாக அமர்ந்து செல்லலாம். சற்று நெருக்கமாக அமர்ந்தால், 9 பேர் வரையில் கூட இந்த கார்களில் பயணிக்க முடியும். அதேபோல் இந்த இரு கார்களில் உட்பக்க டேஸ்போர்டில் ஒரே மாதிரியான 10.1-இன்ச் டச் ஸ்க்ரீன் திரை கிடைக்கும்.

maruti suzuki invicto vs toyota innova hycross

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், ஏர்பேக்குகள், இபிடி உள்ளிட்டவை இந்த இரு கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடாஸ் (ADAS) வசதிகள் மாருதி சுஸுகி இன்விக்டோவில் வழங்கப்படவில்லை. ஆனால், உலகம் முழுவதும் வேகமாக பிரபலமாகிவரும் இந்த மாடர்ன் தொழிற்நுட்ப அம்சத்தினை இன்னோவா ஹைகிராஸ் காரில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகி இன்விக்டோ மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இரண்டும் ஒரே 'TNGA-C ஹை' பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டாலும் தனித்துவமான அம்சங்களை சமமாக பெற்றுள்ளன. அதாவது, வலிமையான ஹைப்ரீட் என்ஜினை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்விக்டோ சரியான தேர்வு. அதுவே, குறைந்த விலையில் மாடர்ன் எம்பிவி காரை வாங்க நினைப்பவர்களுக்கு இன்னோவா ஹைகிராஸ் சரியானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 6, 2023, 7:30 [IST]
English summary
Maruti suzuki invicto vs toyota innova hycross comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X