8 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! ரேஷன் கடை மாதிரி ஷோரூம்களில் மக்கள் முட்டி மோதறாங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை ஜெட்டா ப்ளஸ் (Zeta Plus) மற்றும் ஆல்பா ப்ளஸ் (Alpha Plus) வேரியண்ட்கள் ஆகும்.

இதில் ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட்டானது, 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆல்பா ப்ளஸ் வேரியண்ட்டானது, 7 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கும். மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் ஆரம்ப விலை (Price) 24.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Maruti Suzuki Invicto

இந்த சூழலில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் காத்திருப்பு காலம் (Waiting Period) குறித்த தகவல் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. இதன்படி தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 10 மாதங்கள் வரை உள்ளது. அதாவது நீங்கள் முன்பதிவு செய்த நாளில் இருந்து, 8 முதல் 10 மாதங்கள் கழித்துதான், மாருதி சுஸுகி இன்விக்டோ கார் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது வரை 6,400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி இன்விக்டோ காரை முன்பதிவு செய்துள்ளனர். அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளதால், மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது.

Maruti Suzuki Invicto Rear Design

ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காருக்கான காத்திருப்பு காலத்தை விட, மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கான காத்திருப்பு காலம் குறைவுதான். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஹைப்ரிட் வேரியண்ட்களை டெலிவரி பெற வேண்டுமென்றால், நீங்கள் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும்!

மாருதி சுஸுகி இன்விக்டோ காரும் ஹைப்ரிட் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் (Petrol Hybrid) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன், இ-சிவிடி (e-CVT) கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ கார் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை பற்றி பேசி கொண்டிருப்பது ஏன்? என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு வரலாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார்தான் மாருதி சுஸுகி இன்விக்டோ. அதாவது ரீ-பேட்ஜ் வெர்ஷன். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஒரு சில மாற்றங்களை செய்து, இன்விக்டோ என்ற பெயரில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணியில் இருப்பதால், இப்படி கார்களை பரிமாற்றம் செய்து கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு 2 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. ஆனால் மாருதி சுஸுகி இன்விக்டோ காருக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 10 மாதங்களாக மட்டுமே உள்ளது. இதுவும் ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்தான்.

எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் டெலிவரிக்காக மிக நீண்ட காலம் பொறுமையாக காத்து கொண்டிருக்க முடியாது என நினைப்பவர்கள், மாருதி சுஸுகி இன்விக்டோ காரை முன்பதிவு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். இவை இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான் என்பதால், இந்த முடிவை எடுப்பதில் பெரிதாக தயக்கம் தேவையில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 18:45 [IST]
English summary
Maruti suzuki invicto waiting period 8 to 10 months all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+