விலை குறைவான இன்விக்டோ உட்பக்கம் எப்படி இருக்கும்? படங்கள் வெளியீடு! ஒவ்வொரு படமும் சுண்டி இழுக்குதேப்பா!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி இன்விக்டோ எம்பிவி ரக கார் இந்திய சந்தையில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங்குகள் தொடங்கிவிட்டநிலையில், தற்போது புக்கிங்குகள் குவிந்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 6,488 புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இது நேற்றைய நாள் (ஜூலை 7) நிலவரப்படி கிடைத்த புக்கிங்கின் எண்ணிக்கை விபரம் ஆகும். இன்றைய தினத்தில் கூடுதல் புக்கிங்குகள் கிடைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் மாருதி சுஸுகி இன்விக்டோவின் ஆரம்ப நிலை வேரியண்டின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டக் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Maruti invicto zeta plus 7 front view

புதிய இன்விக்டோ எம்பிவி கார் ஜீட்டா பிளஸ் 7 சீட்டர், ஜீட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா 7 சீட்டர் எனும் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஜீட்டா பிளஸ் 7 சீட்டரே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 24.79 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தேர்வின் படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த படங்கள், மற்ற தேர்வுகளைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஜீட்டா பிளஸ் 7 அதிக வசதிகள் கொண்டதாக உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Maruti invicto zeta plus 7 display

இன்விக்டோவின் உயர் நிலை தேர்வு எப்படி இருக்கின்றதோ அதைபோலவே வெளிப்புற தோற்றத்தை ஜீட்டா பிளஸ் 7 சீட்டரும் கொண்டிருக்கின்றது. கிராண்ட் விட்டாராவில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் போன்ற மிக சூப்பரான க்ரில்லே புதிய இன்விக்டோவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இரு முனைகளிலும் உள்ள எல்இடி ஹெட்லைட்டை இணைக்கின்ற வகையில் ஓர் பட்டையான குரோம் பார் முகப்பு பகுதியில் நிலை நிறுத்தி இருக்கின்றனர்.

இதுதவிர, மெல்லிய இழை போன்ற எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் அழகிய பம்பர் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமா இன்னும் ஏராளமான அழகு அம்சங்கள் இன்விக்டோவின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஜீட்டா பிளஸ் 7 சீட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Maruti invicto zeta plus 7 steering wheel

அந்தவகையில், 17 அங்குல டூயல் டோன் அலாய் வீல், பின் பக்கத்தில் குரோம் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், குரோம் கதவு பிடிகள், குரோம் விண்டோ லைன்கள் ஆகியவை இதில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் உட்பக்கமும் கிட்டதட்ட உயர்நிலை தேர்விற்கு இணையானதாக இருக்கின்றது. கருப்பு நிறத்தினாலேயே இன்விக்டோ ஜீட்டா பிளஸ் 7 சீட்டர் தேர்வு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், 10 அங்குல திரைக்கு பதிலாக 8 அங்குல திரையே இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மலிவு விலையில் இந்த தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று இன்னும் சில விஷயங்களில் மாருதி சுஸுகி கணிசமான மாற்றங்களை அது செய்திருக்கின்றது.

Maruti invicto zeta plus 7 front side view

அதேநேரத்தில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் திரை, சாவியே இல்லாமல் நுழையும் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்கள் பலவற்றை தவிர்க்காமல் மாருதி சுஸுகி ஆரம்ப நிலை வேரியண்டில் வழங்கி இருக்கின்றது.

ஆனால், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் போன்ற பல பிரீமியம் அம்சங்களை அது இந்த தேர்வில் வழங்கவில்லை. இவற்றையும், வெண்டிலேட் இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கேமிரா மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற அம்சங்களையும் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் உயர்நிலை தேர்வு இன்விக்டோவைதான் வாங்க வேண்டும்.

அதில் மிக மிக தாராளமான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இன்விக்டோவின் ஆரம்ப நிலை வேரியண்டில் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆட்டோ ஹோல்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

அதே உயர்நிலை வேரியண்டில் பார்த்தால் இதைவிட அதிகபட்ச பாதுகாப்பும் அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறு வேரியண்டுகளுக்கு ஏற்ப சிறப்பம்சம், அழகு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிவற்றை மாருதி சுஸுகி இன்விக்டோவில் வழங்கி இருக்கின்றது. அம்சங்களில் இந்த கார் எப்படி வேணா இருந்துட்டு போகட்டும், மைலேஜ் விஷயத்தில் இந்த கார் எப்படி இருக்கும்னு கேக்குறீங்களா..

மாருதி சுஸுகி இன்விக்டோ எம்பிவி ஒரு லிட்டருக்கு 23 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இதற்கு அந்த காரில் 2.0 லிட்டர் மோட்டாருடன் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் டெக்னாலஜியே காரணமாக இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து அதிக மைலேஜை மட்டுமல்ல, மிக சூப்பரான திறனையும் வெளியேற்றும். 186 பிஎஸ் மற்றும் 206 என்எம் டார்க்கை அது வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி இன்விக்டோவிற்கு இப்போதே வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. ஆகையால், மாருதியின் பிற தயாரிப்புகளைப் போலவே இதற்கும் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோல், இதன் வருகை இன்னோவா ஹைகிராஸுக்கு பெருத்த போட்டியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 18:34 [IST]
English summary
Maruti suzuki invicto zeta plus 7 seater interior first look
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X