இப்ப புக் பண்ணா டெலிவரி பண்ண 6 மாசம் கூட ஆகும்! ஜிம்னி, ஃப்ரான்க்ஸ் காரின் காத்திருப்பு காலம் எவ்வளவு?

மாருதி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய கார்களின் காத்திருப்பு காலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தற்போது புக் செய்தால் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தியது. ஃப்ரான்க்ஸ் கார் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகவும், ஜிம்னி கார் லைப் ஸ்டைல் எஸ்யூவி ரக காராகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கான புக்கிங் ஜனவரி மாதமே தொடங்கியது.

maruti suzuki jimny and fronx waiting period

இந்த இரு கார்களுக்கும் மக்கள் மத்தியில் அறிமுகத்துக்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் அறிமுகத்திற்குப் பின்பு இந்த இரு கார்களையும் மக்கள் போட்டி போட்டு புக்கிங் செய்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாருதி நிறுவனம் தனது ஃப்ரான்க்ஸ் காரை அதிகாரப்பூர்வமாக ரூபாய் 7.47 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் தனது ஜிம்னி காரை ரூபாய் 12.74 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் ஃப்ரான்க்ஸ் காரை சுமார் 30000 பேர் புக்கிங் செய்தனர் இந்த கார் பலேனோ ப்ரீமியம் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஜிம்னி கார் நான்காம் தலைமுறை காராக 5 டோர் மாடல் கொண்ட காராக லேடர் பிரேம் சேசிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ்: ஃப்ரான்க்ஸ் காரை பொருத்தவரை மொத்தம் ஐந்து வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. ஸிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்ஃபா மற்றும் ஸெட்டா ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் என்ட்ரி வேரியன்டான ஸிக்மா மற்றும் டெல்டா பெட்ரோல் வேரியன்ட்களுக்கு 8-10 வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் இருக்கிறது.

அதேபோல டெல்டா பிளஸ் டர்போ பெட்ரோல் வேரியன்டிற்கு 6-8 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இருப்பதிலேயே குறைந்த காத்திருப்பு காலம் கொண்ட வேரியன்டாக டெல்டா ஏஎம்டி பெட்ரோல் வேரியன்ட் இருக்கிறது. இதற்கு 4-6 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

அதுவே டெல்டா பிளஸ் ஏஎம்டி பெட்ரோல் வேரியன்டை பொறுத்த வரை 9-10 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. ஸெட்டா டர்போ பெட்ரோல் வேரியன்டை பொறுத்த வரை 10-12 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. ஜெட்டா ஏடி டர்போ பெட்ரோல் வேரியன்டை பொறுத்தவரை 12-14 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

இந்த மாருதி ஃப்ரான்க்ஸ் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது ஸிக்மா டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் மேனுவல் கியர் பாக்ஸ் உடனும் டெல்டா மட்டும் டெல்டா ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடனும் இருக்கிறது.

அடுத்ததாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது டெல்டா பிளஸ் ஸெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியன்ட்களில் கிடைக்கப்பெறுகிறது. இந்த இஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இதில் ஸெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்டில் மட்டுமே டார்க் கன்வெர்ட்டர் ஏடி கியர் பாக்ஸ் இருக்கிறது.

மாருதி ஜிம்னி: மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியன்ட்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு வேரியண்டுகளும் 24 முதல் 26 வாரங்கள் வரை காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கிறது. இந்த காரைப் பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்கிறது.

இந்த எஞ்சின் 104.8. பிஎஸ் பவரையும் 134.2 எண்ணம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்சின் பை ஸ்பீடு மேனுவல் அல்லது ஃபோர் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கான காத்திருப்பு காலத்தை பார்த்தால் ஏகப்பட்ட மக்கள் இந்த காரை வாங்க புக்கிங் செய்துள்ளதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காருக்கு காத்திருப்பு காலம் அதிகாக இருந்தால் அதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அதே நேரம் டிமாண்ட் அதிகமானால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பை அதிகப்படுத்துவார்கள். இதனால் காத்திருப்பு காலம் விரைவில் குறையும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 14:06 [IST]
English summary
Maruti suzuki jimny and fronx variant wise waiting period details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+