இந்த கார் வந்த பிறகு மாருதி சுஸுகியின் ரேஞ்சே மாறிடுச்சு!! ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் தான் எல்லாரும் வாங்குறாங்க!
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனத்தை பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த வாகனத்தை பலர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் தான் அதிகமாக வாங்குவதாக ஓர் சுவாரஸ்யமான புள்ளி விபரம் வெளியாகி உள்ளது. வாருங்கள், அதனை பற்றி இனி பார்க்கலாம்.
மஹிந்திரா தாருக்கு போட்டியாக, ஜனவரியில் நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த ஜிம்னியை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்தது. அப்போதே இந்த வாகனத்திற்கான புக்கிங்குகளும் துவங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஜிம்னி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மஹிந்திரா தாரை விட அளவில் சிறியதாக இருந்தாலும், 5 கதவுகளை கொண்டதாக இருப்பதால் ஜிம்னியை மக்கள் பலர் போட்டிப் போட்டு புக் செய்து வருகின்றனர். இதுவரையில், சுமார் 14,500 ஜிம்னி வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. ஆனால், அவற்றுள் விற்பனை செய்யப்பட்டவை என்று பார்த்தால், 10,000 மட்டுமே.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 2,500 ஜிம்னி வாகனங்களை மாருதி சுஸுகி தயாரிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் 2,500 ஜிம்னி வாகனங்களில் மாதந்தோறும் எத்தனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது தெரியவில்லை.

2023 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி காட்சிப்படுத்திய இரு ஹைலைட்களான தயாரிப்புகள் ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகும். ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிம்னி வாகனங்களின் உற்பத்தி பணிகள் மே மாதத்தில் இருந்து துவங்கின. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ஆப்ஷன்களில் ஜிம்னி விற்பனை செய்யப்படுகின்றது.
இதில் ஆட்டோமேட்டிக் தேர்வில் தான் பலர் ஜிம்னியை வாங்குவதாக ஓர் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 5 சிங்கிள்-டோன் மற்றும் 2 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் ஜிம்னி விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் ஜிம்னியில் ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனை மட்டுமே மாருதி சுஸுகி வழங்குகிறது. அதுதான், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆகும்.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 103 பிஎச்பி மற்றும் 136 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம். மாருதி சுஸுகி ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.15.05 லட்சம் வரையில் உள்ளன.
ஜிம்னி வாகனத்தின் நீளம் 3985மிமீ, அகலம் 1645மிமீ மற்றும் வீல்பேஸ் 2590மிமீ ஆகும். தரையில் இருந்து இந்த வாகனத்தின் அடித்தளம் ஆனது 210மிமீ உயரத்தில் உள்ளது. பவர் ஸ்டேரிங், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவர் ஏர்பேக், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், அலாய் சக்கரங்கள், முன்பக்கத்தில் பவர் விண்டோஸ், ஏசி, பேசஞ்சர் ஏர்பேக், ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை ஜிம்னியில் வழங்கப்படும் இதர முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் சமீப கால கவர்ச்சிக்கரமான தயாரிப்புகளுள் ஒன்றாக ஜிம்னியை சொல்லலாம். இருப்பினும், இந்த தயாரிப்பை ஆட்டோமேட்டிக் தேர்வில் வாங்கவே கஸ்டமர்ஸ் பலர் விரும்புவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து இந்தியாவிலும் மக்களின் இரசனை ஆட்டோமேட்டிக் வாகனங்களை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்த முடிகிறது.


Click it and Unblock the Notifications









