மாருதி சுஸுகியோட இந்த காரை ஒரு நாளுக்கே இத்தன பேரு புக் பண்றாங்களா! பாவம் மஹிந்திரா யாரு மொகத்துல முழுச்சுதோ!

இந்திய சந்தையில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா தார் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஜிம்னி எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இந்த காருக்கு நாம் எதிர்பார்த்திராத அளவிற்கு புக்கிங் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "ஒரு நாளைக்கு இத்தனை யூனிட்டுகளா" என ஆச்சரியப்படும் அளவிற்கு அதற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஒரு நாளைக்கு 150க்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Maruti suzuki jimny water wading

இப்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 31 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு கிடைத்திருக்கின்றன. இதில் பல ஆயிரக் கணக்கான புக்கிங்குகள் மாருதி சுஸுகி ஜிம்னியின் விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கிடைத்தவை ஆகும். இந்த நிலையிலேயே மேலும் சில ஆயிரக் கணக்கான புக்கிங்குகள் ஜிம்னிக்குக் கிடைத்திருக்கின்றன.

தொடர்ந்து புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் தற்போது அக்காருக்கான காத்திருப்பு காலம் பலமடங்கு அதிகரித்திருக்கின்றது. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்திடம் தொடர்புக் கொண்டு கேட்டறிந்ததில், மாருதி சுஸுகி ஜிம்னிக்கு இப்போதே காத்திருப்பு காலம் 7 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை நீட்டித்துக் காணப்படுவது தெரிய வந்திருக்கின்றது. வருங்காலங்களில் இந்த காத்திருப்பு காலம் இன்னும் பலமடங்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Maruti suzuki jimny tracking side

இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது நாள் ஒன்றிற்கு 150க்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஜிம்னி ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஜீட்டா எம்டி (ZetaMT), ஆல்ஃபா எம்டி (AlphaMT), ஆல்ஃபா எம்டி டூயல் (Alpha MT DualTone), ஜீட்டா ஏடி (Zeta AT), ஆல்ஃபா ஏடி (Alpha AT) மற்றும் ஆல்ஃபா ஏடி டூயல் டோன் (Alpha AT Dual Tone) அவை ஆகும்.

இதில், ஜீட்டா எம்டியே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதற்கு ரூ. 12.74 லட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். இந்த கார் மாடலின் அதிகபட்ச விலையே ரூ. 15.05 லட்சம் மட்டுமே ஆகும்.

Maruti suzuki jimny display

இந்த காருக்கு போட்டியாக கருதப்படும் மஹிந்திரா தார் ரூ. 10.54 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷன் ஆகும். ஆகையால், ஜிம்னியைக் காட்டிலும் கணிசமான அளவு குறைவான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஜிம்னி ஓர் 5 கதவுகள் கொண்ட கார் ஆகும். இதில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஆஃப் ரோடு பயணத்தை மிகுந்த த்ரில்லான ரைடாக மாற்றுவதற்கான அம்சங்கள் மிக தாராளமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 3 லிங்க் ரிஜிட் ஆக்ஸில் சஸ்பென்ஷன், லேடர் ஃப்ரேம் ரக சேஸிஸ் மற்றும் ஆல்கிரிப் ப்ரோ (4 வீல் டிரைவ் சிஸ்டம்) ஆகியவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Maruti suzuki jimny beauty

இதுதவிர, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிக் கொண்ட 9 அங்குல திரை, ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஆர்கேமிஸின் பிரீமியம் தர சவுண்ட் சிஸ்டம் சூப்பரான சரவுண்ட் சென்ஸ் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Maruti suzuki jimny offroad

பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ஜிம்னியின் அனைத்து வேரியண்டுகளிலும் 6-ஏர் பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ், பிரேக் அசிஸ்ட் ஃபங்க்சன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், சைடு இம்பேக்ட் டூர் பீம்கள் மற்றும் ரியர் வியீ கேமிரா என எக்கசக்க அம்சங்கள் ஜிம்னியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் விரைவில் மாருதி சுஸுகி ஜிம்னி, மஹிந்திரா தார் காருக்கு சங்கு ஊதிவிடுமோ என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இப்போது வரை தார் காருக்கான புக்கிங் குறைந்தபாடில்லை. தற்போது மிக சிறப்பான வரவேற்பே அந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 21:09 [IST]
English summary
Maruti suzuki jimny booking goes up to 150 units per day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X