மாருதி சுஸுகி ஜிம்னியை இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கலாம்!! மஹிந்திரா தாரில் கூட கிடைக்காது...

மாருதி சுஸுகி ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டுள்ளன. விற்பனையில் ஜிம்னிக்கு உண்மையில் எந்த போட்டியும் இல்லை. மஹிந்திரா தார் மட்டுமே உள்ளது. ஆனால் தார் 3 கதவுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஜிம்னி 5 கதவுகளுடன் அறிமுகமாகி உள்ளது. இவை இரண்டிற்கும் இடையே வேறு என்னென்ன விஷயங்கள் ஒத்து போகின்றன? ஒத்து போகவில்லை? என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பரிமாண அளவுகள்: இந்த விஷயத்தை தான் முதலில் பார்க்க வேண்டும். ஏனெனில், கதவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாருதி சுஸுகி ஜிம்னி நீளத்தில் மஹிந்திரா தாரை விட பெரியது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதுதான் இல்லை. ஏனென்றால், ஜிம்னி மற்றும் தார் இரண்டின் நீளமும் 3,985மிமீ தான். இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், அகலம் மற்றும் உயரத்திலும் 3-கதவு தாரை விட 5-கதவு ஜிம்னி சிறியது.

maruti suzuki jimny comparison

பாடி ஸ்டைல்: மஹிந்திரா தாரின் ஒரே குறையாக பலர் கூறுவது அதன் உட்பக்க நெருகலான கட்டமைப்பு ஆகும். இதனை நன்கு புரிந்துக்கொண்டதன் காரணமாகவே ஜிம்னியை ஆரம்பத்திலேயே 5 கதவுகளுடன் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் வாகனத்தின் அளவை மாற்றாதது மாருதி சுஸுகியின் நேர்த்தியான வடிவமைப்பு திறனை வெளிக்காட்டுகிறது. அதேநேரம் மறுபக்கம், சாஃப்-டாப் மற்றும் ஹார்ட்-டாப் என 2 விதமான மேற்கூரை தேர்வுகளில் கிடைப்பது தாரின் பிளஸ் பாயிண்ட்.

என்ஜின்: மஹிந்திரா தார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 1.5 லி டீசல் என்ஜின் மேனுவல் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற இரண்டும் மேனுவல் (அ) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றன. ஜிம்னியை பொறுத்தவரையில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் இந்த என்ஜினை மேனுவல் (அ) ஆட்டோமேட்டிக் தேர்வில் பெறலாம்.

maruti suzuki jimny comparison

ஆஃப்-ரோடு திறன்: கரடுமுரடான, சகதிகள் மிகுந்த ஆஃப்-ரோடு பயணங்களுக்கு எஸ்யூவி வாகனங்களை வாங்கும்போது அவற்றை பல்வேறு கோணங்களில் சரி பார்க்க வேண்டியது அவசியம். அப்ரோச் ஆங்கிள் எனப்படும் எந்தவொரு பாதையையும் எதிர்கொள்ளும் கோணம் மஹிந்திரா தாரில் சிறப்பாக உள்ளது. அதேநேரம் ஜிம்னியில் பாதையை எதிர்க்கொண்டு முடிக்கும் டிபாச்சர் அங்கிள் சிறப்பாக உள்ளது. முன், பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் குறைவாக உள்ளதால் பிரேக்-ஓவர் ஆங்கிள் தாரில் நன்றாக கிடைக்கிறது.

வசதிகள்: இந்த இரு ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களிலும் க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி ஃபங்க்சன் ஸ்டேரிங் சக்கரம், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்றவை வழங்கப்படுகின்றன. ஜிம்னியில் கூடுதலாக 6 ஏர்பேக்குகள், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஹெட்லேம்ப் வாஷர்ஸ், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பெரிய 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

maruti suzuki jimny comparison

விலை: ஏற்கனவே கூறியதுபோல், மாருதி சுஸுகி ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்று (ஜூன் 7) தான் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.15.05 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே மஹிந்திரா தாரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.87 லட்சத்தில் இருந்து ரூ.16.78 லட்சம் வரையில் உள்ளன.

Jimny Petrol Price Thar Petrol 4x4 Price
Zeta MT ₹12.74 Lakh AX (O) MT Convert Top ₹13.87 Lakh
Alpha MT ₹13.69 Lakh LX MT Hard Top ₹14.56 Lakh
Zeta AT ₹13.94 Lakh LX AT Convert Top ₹16.02 Lakh
Alpha AT ₹14.89 Lakh LX AT Hard Top ₹16.10 Lakh
Alpha MT/AT Dual Tone ₹13.85 Lakh / ₹15.05 Lakh -
Jimny Petrol Price Thar Diesel 4x4 Price
Zeta MT ₹12.74 Lakh AX (O) MT Convert Top ₹14.44 Lakh
Alpha MT ₹13.69 Lakh AX (O) MT Hard Top ₹14.49 Lakh
Zeta AT ₹13.94 Lakh LX MT Convert Top ₹15.26 Lakh
Alpha AT ₹14.89 Lakh LX MT Hard Top ₹15.35 Lakh
Alpha MT/AT Dual Tone ₹13.85 Lakh / ₹15.05 Lakh LX AT Convert Top ₹16.68 Lakh
LX AT Hard Top ₹16.78 Lakh

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விலைகளிலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் ஜிம்னியின் கைதான் ஓங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக 5 கதவுகள் வழங்கப்பட்டிருப்பது ஜிம்னிக்கு பல்வேறு வாடிக்கையாளர்களை பெற்று தரும். ஏனெனில் பயணிகள் அதிக பேருடன் பயணிப்பதற்கு எங்களை கேட்டால் மஹிந்திரா தாரை விட புதிய மாருதி சுஸுகி ஜிம்னி மிகவும் ஏற்றது. 5-கதவு மஹிந்திரா தார் வடிவமைப்பு பணிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 16:29 [IST]
English summary
Maruti suzuki jimny comparison with mahindra thar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X