Maruti Suzuki Jimny-ஐ இந்த சீனர்கள் படுத்தும் பாடு இருக்கே... காப்பி அடிப்பதில் பெயர் போனவர்கள்!!

உலகளவில் பிரபலமான வாகனங்களின் போலி மாடல்கள் சீனாவில் விற்பனைக்கு செல்வதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், தற்போது சுஸுகி ஜிம்னி வாகனத்தின் போலி மாடல் சீனாவில் விற்பனையை துவங்க உள்ளது. இந்த நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள அந்த போலி ஜிம்னி வாகனம் குறித்த படங்களை இனி பார்க்கலாம்.

வெளிநாட்டில் காப்புரிமை பெற்ற வாகனங்களின் டிசைனில் சீனாவில் வாகனங்கள் அறிமுகமாகுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு உதாரணங்களாக பல்வேறு வாகனங்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் ஜிம்னியும் இணைய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த போலி ஜிம்னி வாகனம் சீனாவில் நடைபெற உள்ள 2023 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Baojun Yep

இந்த நிலையில் தற்போது, கண்காட்சிக்கு கொண்டுவரும் போது எடுக்கப்பட்ட இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னரும் இந்த வாகனத்தின் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த சமயத்தில் வாகனம் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எந்தவொரு மறைப்புமின்றி, பல்வேறு வண்ணங்களில் காட்சி தந்துள்ளது. இந்த போலி ஜிம்னி வாகனத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர், யெப் (Yep) ஆகும்.

SIAC குழுமத்தின் கீழ் செயல்படும் போஜுன் நிறுவனம் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளது இல்லை... இல்லை ஜெராக்ஸ் எடுத்தாற்போல் காப்பி செய்துள்ளது. இந்த வாகனத்தை பார்த்தவுடன், சுஸுகி ஜிம்னி வாகனம் மட்டுமின்றி, அமெரிக்காவில் பிரபலமான ஃபோர்டு பிரான்கோ காரும் நமது நினைவிற்கு வந்து செல்கிறது. ஆனால் போஜுன் யெப் ஒரு எலக்ட்ரிக் வாகனம் ஆகும். ஆம்... ஜிம்னியில் உள்ளதை போன்று எரிபொருள் என்ஜின் இதில் கிடையாது.

Baojun Yep

யெப் எலக்ட்ரிக் வாகனத்தில் எத்தகைய எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்ற விபரத்தை போஜுன் இன்னும் வெளியிடவில்லை. 2023 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் இந்த விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் போஜுன் யெப் வாகனத்தின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 303கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஸுகி ஜிம்னியின் போலி என கூறினாலும், ஜிம்னியை விட யெப் அளவில் சிறிய வாகனமாகும். ஃபோர்டு பிரான்கோவின் முன்பு சின்ன பொம்மை வாகனம் போன்று இருக்கும். ஏனெனில் பிரான்கோ அந்த அளவிற்கு பெரியது. போஜுன் யெப் வாகனத்தின் மொத்த நீளமே வெறும் 3,381மிமீ தான். நம்ம ஊர் ஆல்டோ 800 கார் கூட இதனை விட அளவில் நீளமானதாக இருக்கும். ஆல்டோ 800 காரை பற்றி ஞாபகம் படுத்திவிட்டேன், இந்த பிரபலமான மாருதி காரின் விற்பனை சமீபத்தில்தான் இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

Baojun Yep

யெப் எலக்ட்ரிக் வாகனத்தின் அகலம் 1,685மிமீ மற்றும் உயரம் 1,721மிமீ ஆகும். இதில் எல்லாம் யெப் வாகனத்தை விட ஆல்டோ 800 கார் சிறியதுதான். யெப் வாகனத்தின் வீல்பேஸ், அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையே தூரம் 2,110மிமீ ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் எடை வெறும் 1,006 கிலோ மட்டுமே. இந்த வாகனத்தில் எலக்ட்ரிக் மோட்டார் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 68 பிஎஸ் மற்றும் 140 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

இவ்வாறான போலி வாகனங்களை வைத்துக்கொண்டு குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியதுதான். சீனாவை விட்டு வெளியே எடுத்து வந்தாலேயே சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாக்க நேரிடும். இதனால் எங்களுக்கு சீன மக்களே போதும், அவர்களே ஆயிரக்கணக்கில் இத்தகைய வாகனங்களை வாங்குகின்றனர் என்ற நம்பிக்கையில் போஜுன் போன்ற சீன நிறுவனங்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 15:15 [IST]
English summary
Maruti suzuki jimny copied by baojun in china
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X