ஜிம்னி கார் பற்றி எல்லோரும் எதிர்பார்க்குற தகவல் இது தான்! நீங்க கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

மாருதி ஜிம்னி 5 சீட்டர் கார் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ள நிலையில் அந்த காரின் கிராஷ் டெஸ்ட் குறித்து மக்கள் அதிகம் ஆர்வமாகத் தேடி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது ஜிம்னி என்ற 5 டோர் லைஃப் ஸ்டைல் எஸ்யூவி காரை இந்தியாவிற்காகக் காட்சிப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங்கையும் மாருதி நிறுவனம் துவங்கிவிட்டது.

jimny car crash test report

இந்நிலையில் இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் இந்த காரின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் குறித்து மக்கள் அதிக ஆர்வமாகத் தேடி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தப்போகும் ஜிம்னி 5 டோர் காரை அந்நிறுவனம் இதுவரை கிராஷ் டெஸ்ட் செய்யவில்லை.

ஆனால் மாருதி நிறுவனம் இந்தியாவில் இதே ஜிம்னி காரின் 3 டோர் வெர்ஷன்களை தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த3 டோரின் எக்ஸ்டென்டட் வெர்ஷன் தான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 5 டோர் ஜிம்னி கார். இந்நிலையில் 3 டோர் ஜிம்னி கார் கடந்த 2018ம் ஆண்டு யூரோ என்கேப் அமைப்பில் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அந்த டெஸ்டில் இந்த கார் 3 ஸ்டார் ரேட்டிங் தான் பெற்றது.

jimny car crash test report

இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முன்பக்க ஆஃப்செட் டெஸ்டில் 8க்கு 4.6 புள்ளிகளைப் பெற்றது. முன்பக்க முழு அகல கிராஷ் டெஸ்டில் 8க்கு 5.8 புள்ளிகளைப் பெற்றது. இதில் பயணிகளுக்கு நல்ல கால் மற்றும் தலைபகுதி பாதுகாப்பு இருக்கிறது. இதுவே டிரைவருக்கு குறைவான கால் மற்றும் ஓரளவிற்கான தலை பகுதி பாதுகாப்பு இருக்கிறது, நெஞ்சு பகுதிக்குக் குறைவான பாதுகாப்பு இருக்கிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த 3 டோர் ஜிம்னி கார் யூரோ கிராஷ் டெஸ்டில் மொத்தம் 27.9 புள்ளிகளைப் பெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த கார் 84 சதவீத பாதுகாப்பை வழங்குகிறது. பெரியவர்கள் பாதுகாப்பில் வெறும் 73 சதவீத பாதுகாப்பைத் தான் வழங்குகிறது. இந்த டெஸ்டிங் கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்பெஆழது இந்த காரில் கர்டன் ஏர்பேக்களுடன் கூடிய டூயல் ஏர்பேக், ப்ரீடென்ஷன் சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ஐஎஸ்ஓஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஸ்பீடு மற்றும் லேன் அசிஸ்டென்ஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருந்தது.

jimny car crash test report

ஜம்னி காரின் இந்திய வெர்ஷனில் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் கர்டன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி, இபிடி, சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஆனால் இதில் லேன் அசிஸ்ட், ஏஇபி, ஸ்பீடு அசிஸ்ட், ஆகிய அம்சங்கள் இல்லை இந்த கார் குலோபல் என்கேப் சோதனையில் எத்தனை ஸ்டார்களை பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் மத்தியில் பாதுகாப்பான கார்கள் மீதான விருப்பம் அதிகமாகிவிட்டது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பான தயாரிப்புகளே வேண்டும் என விரும்பத் துவங்கிவிட்டனர். இதனால் கார் தயாரிப்பாளர்களும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Article Published On: Tuesday, May 16, 2023, 18:30 [IST]
English summary
Maruti suzuki jimny euro ncap crash test report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X