போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி! 2 புதிய கார்களுக்கு புக்கிங் குவியுது! மக்கள் போட்டி போட்றாங்க!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழா என கருதப்படும் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo), சமீபத்தில் நடைபெற்றது. இதில், 5 டோர் ஜிம்னி (Five-door Jimny) மற்றும் ஃப்ரான்க்ஸ் (Fronx) ஆகிய கார்களை மாருதி சுஸுகி (Maruti Suzuki) பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

அத்துடன் இந்த 2 கார்களுக்கும் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களுக்கும் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இந்த 2 கார்களுக்கும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 10 நாட்கள் மட்டும்தான் ஆகின்றன.

போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி! 2 புதிய கார்களுக்கு புக்கிங் குவியுது! மக்கள் போட்டி போட்றாங்க!

அதுக்குள்ள இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு தற்போது வரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு தற்போது வரை 2,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இதில், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நீளம் 3,985 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,590 மிமீ ஆகவும் உள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) வேரியண்ட்களில், மாருதி சுஸுகி ஜிம்னி கார் கிடைக்கும். இந்த காரில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல் க்ரிப் 4x4 ட்ரைவ்ட்ரெயின் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி! 2 புதிய கார்களுக்கு புக்கிங் குவியுது! மக்கள் போட்டி போட்றாங்க!

விரைவில் டெலிவரி தொடக்கம்!

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி ஜிம்னி காரை நீங்கள் வாங்குவதாக இருந்தால், 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, ஜிம்னி காரை டெலிவரி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஜிம்னி காரை போலவே, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கும் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

2 இன்ஜின்கள்!

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில், டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 148 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 88 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த 2 இன்ஜின்களுடனும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனும், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. சிக்மா (Sigma), டெல்டா (Delta), டெல்டா ப்ளஸ் (Delta Plus), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகிய வேரியண்ட்களில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கிடைக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நம்பிக்கை!

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டெலிவரி பணிகளும் வரும் மாதங்களில் தொடங்கப்படவுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களும் ஒன்றாக இணைந்து, 11,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை வாரி குவித்துள்ளன. எனவே இந்த ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 கார்களும் விற்பனையில் சாதிக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Article Published On: Monday, January 23, 2023, 13:24 [IST]
English summary
Maruti suzuki jimny fronx cumulatively receives over 11500 bookings
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+