ஜிம்னி காருக்கு இரண்டே நாளில் குவிந்த புக்கிங்! போற போக்க பாத்தா 1 வருசம் வெயிட்டிங் டைம் வந்துடும் போலயே!

மாருதி நிறுவனம் சமீபத்தில் ஜிம்னி காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் 2 நாளில் 3000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாதம் 1000 கார் தான் தயாரிக்கப்படுவதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

மாருதி நிறுவனத்திடம் மக்கள் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்த கார் ஜிம்னி என்ற ஆஃப் ரோடு எஸ்யூவி காரை தான். இந்த காரை ஒரு வழியாக மாருதி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முன் முறையாகப் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே மாருதி நிறுவனம் ஜிம்னி காரின் 3 டோர் வெர்ஷனை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது 5 டோர் வெர்ஷனை இந்தியா மற்றும் உலக சந்தைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிம்னி காருக்கு இரண்டே நாளில் குவிந்த புக்கிங்! போற போக்க பாத்தா 1 வருசம் வெயிட்டிங் டைம் வந்துடும் போலயே!

ஜிம்னி ஒன்றும் புதிய கார் அல்ல 1970கள் முதல் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. தற்போது 4வது தலைமுறை காராக இந்த கார் உருவாகியுள்ளது. தற்போது மாருதி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதை அவர்களது நெக்ஸான ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் நெக்ஸா ஷோரூம்களில் துவங்கியுள்ளது. புக்கிங் துவங்கிய இரண்டை நாட்களில் இந்த காரை 3000 பேர் புக் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மாருதி நிறுவனம் இந்த ஜிம்னி காரை பொருத்தவரை மாதம் 1000 கார்களை இந்திய விற்பனைக்காகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பொழுதே இந்த காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதமாகிவிட்டது. மாருதி நிறுவனம் 10 ஆயிரம் புக்கிங்கை விரைவில் எதிர்பார்க்கிறது. அப்படி என்றால் மாருதி ஜிம்னி5 டோர் காரின் காத்திருப்பு காலம் தற்போதைய தயாரிப்பு அளவின் படி 1 ஆண்டுகள் வரச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாருதி ஜிம்னி 5 டோர் காரை பொருத்தவரை அதில் மாருதி நிறுவனத்தின் கே15பி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 103 பிஎச்பி பவரையும் 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதில் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பமும் உள்ளது.

இந்த காரில் ரோபஸ்ட் பாடி ஃபிரேம் உருவாக்கப்பட்டுள்ளது. சுஸூகி ஆல் வீல் ப்ரோ 4 வீல் டிரைவ் டெக், ஆகியன இருக்கிறது. 3 டோர் வெர்ஷனை ஒப்பிடும் போது 3985 மிமீ நீளம், 1645 மிமீ அகலம் 1720 மிமீ உயரம் இந்த காரில் இருக்கிறது. வீல் பேஸூம் அதிகமாக இருக்கிறது. இந்த கார் 2 விதமான வேரியன்ட்களில் இருக்கிறது. ஸெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியன்ட்களில் பொதுவாக இன்ஜின், 6 ஏர்பேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக்கலி அடெஜெட்டபுள் விங் மிரர், ரியர் டிஃபாகர், ரிவர்ஸ் கேமராகள், பவர் விண்டோ ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஸெட்டா வேரியன்டை பொருத்தவரை 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 4 ஸ்பீர்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆகியன உள்ளன. ஆல்ஃபா வேரியன்டை பொருத்தவரை ஆட்டோமெட்டிக் ஹெட்லைட், 9.0 இன்ச் டச் ஸ்கிரீன் ஸமார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Arkamys சவுண்ட் சிஸ்டம்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாக் லேம்ப்கள், மற்றும் ஹெட்லைட் வாசர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த இரண்டு வேரியன்ட்களும் 7 கலர் ஆப்ஷன் உடன் வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Jimny got 3000 bookings know the waiting period
Story first published: Tuesday, January 17, 2023, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X