மாருதி ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்! பல வருஷ காத்திருப்பிற்கு பிறகு வந்த காராச்சே சும்மா விடுவாகளா!

மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV)-க்கு போட்டியாக விரைவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் ஜிம்னி (Jimny) காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையை ஏற்கனவே நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது. இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக தென்படுகின்றது.

நீண்ட காலமாக இதன் வருகை இப்போது அரங்கேறிவிடும், அப்போது அரங்கேறிவிடும் என காத்துக் கொண்டிருந்தநிலையிலேயே கடந்த ஜனவரி மாதத்தில் ஜிம்னியின் இந்திய வருகையை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே இந்த தகவலை மாருதி சுஸுகி உறுதிப்படுத்தியது.

ஜிம்னி

மேலும், அன்றைய தினமே ஜிம்னிக்கான புக்கிங்கையும் அது தொடங்கி வைத்தது. இந்நிலையில், ஜிம்னியை விற்பனையாளர்களின் கை வசம் ஒப்படைக்கும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ விற்பனையகங்களில் ஜிம்னி கெத்தாக நின்றுக் கொண்டிருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன.

மேலும், காரை வாகன பிரியர்களும், மக்களும், கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கும் வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. நீண்ட கால எதிர்பார்ப்பு என்பதால் இந்த காரை பலர் மிகுந்த ஆர்வமுடன் வந்து பார்த்து விட்டு சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த காருக்கு புக்கிங்குகள் மலை போல் குவிந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஜிம்னி

இம்மாதத்தின் முதல் வாரத்திலேயே மாருதி சுஸுகி ஜிம்னிக்கு சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே அக்காரை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் மாருதி சுஸுகி ஈடுபட்டு வருகின்றது. இந்த வாகனம் மஹிந்திரா தாருக்கு மட்டுமில்லைங்க, ஃபோர்ஸ் கூர்காவிற்கும் போட்டியாக களமிறங்க இருக்கின்றது.

இப்போது வரை மாருதி சுஸுகி, ஜிம்னியின் விலையை அறிவிக்கவில்லை. இதற்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை மாருதி சுஸுகி நிர்வாகம் இதுவரை உறுதி செய்யவில்லை. போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்க இந்த மாதிரியான குறைவான விலையிலேயே ஜிம்னி விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிம்னி

மாருதி சுஸுகி ஜிம்னி பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.

இதுதவிர கூடுதல் பிரீமியம் அம்சமாக 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இது, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.

மோட்டாரை பொருத்த வரை இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோட்டார் 105 பிஎஸ் பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 17:41 [IST]
English summary
Maruti suzuki jimny has started arriving showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X