இவ்ளோ கம்மியான விலையிலதான் ஜிம்னி விற்பனைக்கு வரபோகுதா? தாரின் வில்லன் விற்பனைக்கு வர இருக்கும் நாள் இதுதான்!

மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி களமிறக்க இருக்க உள்ள கார் மாடலே ஜிம்னி. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த பணிகள் மும்மரமாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாருதி சுஸுகி ஜிம்னியைப் புக் செய்திருக்கின்றனர். இதன் விலைகள் அறிவிக்கப்படும் முன்னரே இந்த அளவு அதிக புக்கிங்கை ஜிம்னி நாட்டில் குவித்துள்ளது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி ஜிம்னியின் அதிகாரப்பூர்வ அறிமுக நாள் எப்போது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Maruti jimny front beauty

ஜூன் 7 ஆம் ஜிம்னி இந்தியாவில் அறிமுகமாகும் என ஆட்டோ கார் இந்தியா அதன் செய்தியின் வாயிலாக தெரிவித்து உள்ளது. வெகு நாட்களாக இந்த காரின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த தகவல் அமைந்துள்ளது.

முன்னதாக இந்த கார் நடப்பு மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாருதி தரப்பிலும் இதுமாதிரியான அசைவுகளே வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால், திடீரென ஜீன் மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிறுவனம் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

Maruti jimny front design

இந்த நிலையிலேயே வரும் ஜூன் 7 ஆம் தேதியை அது தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை அதன் விற்பனையாளர்கள் ஷோரூமுக்கு அனுப்பி வைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் முழுக்க முழுக்க தார் எஸ்யூவிக்கே மிகப் பெரிய போட்டியாளனாக அமைய இருக்கின்றது.

இந்த கார் மிக சமீபத்திலேயே 1 லட்சம் யூனிட் சேல்ஸ் எனும் புதிய மைல்கல்லை எட்டியது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் தார் காருக்கே போட்டி அளிக்கும் விதமாக 5 கதவுகள் வெர்ஷனில் ஜிம்னி இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது.

Maruti jimny side view

இந்த 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் 103 எச்பி மற்றும் 134 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் ஜிம்னியில் வழங்கப்பட இருக்கின்றன.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.94 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 16.39 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது. மஹிந்திரா தார் எஸ்யூவியைக் காட்டிலும் அதிக மைலேஜ் திறன் இவை ஆகும். இதேபோல், விலையிலும் தாருக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே ஜிம்னி இருக்கப் போகின்றது.

Maruti jimny rear design

ரூ. 9.99 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையிலேயே ஜிம்னி விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை தாருக்கு மிக மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மாருதி சுஸுகி ஜிம்னியில் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா என எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பாதுகாப்பு தருவதில் மஹிந்திரா தார் காருக்கே இது டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல், தொழில்நுட்ப வசதிகளாக 9 அங்குல டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இன்ஃபோடெயினமென்ட் திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் பல ஆண்டுகள் எதிர்பார்ப்பாக இந்த புதிய தலைமுறை ஜிம்னி இருக்கின்றது. இதன் வருகையே தற்போது உறுதியாகி இருக்கின்றது. இந்த தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இப்போது அனைவரின் எதிர்பார்ப்பு இந்த அறிமுக நாளை நோக்கி நகர்ந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 20:09 [IST]
English summary
Maruti suzuki jimny india launch date leaked
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X