மைலேஜ் இவ்வளவு கொடுக்குமா புதிய மாருதி சுஸுகி ஜிம்னி? அப்போ மார்க்கெட்டில் செம்ம ஹிட் ஆக போகுது!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனத்தின் மைலேஜ் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் ஜப்பானில் விற்பனையில் உள்ள ஜிம்னி ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவின் போது முதல்முறையாக மாருதி சுஸுகி ஜிம்னி இந்திய பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

maruti suzuki jimny mileage figures

மேலும், அதே தினத்தில் ஜிம்னி வாகனத்திற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டன. ஜப்பான் உள்பட வெளிநாட்டு சந்தைகளில் 3-கதவு மற்றும் 5-கதவு வெர்சன்களில் ஜிம்னி விற்பனையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 5-கதவு வெர்சனில் மட்டுமே ஜிம்னியை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஜிம்னியின் மைலேஜ் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஜிம்னியில் மாருதி சுஸுகி நிறுவனம் மிக முக்கிய அம்சமாக குறைந்த விகிதத்தில் கியர் ரேஞ்சை கொண்ட ஆல் கிரிப் பிரோ 4x4 டிரான்ஸ்ஃபர் கேஸை வழங்க உள்ளது. ஜிம்னியில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 134.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

maruti suzuki jimny mileage figures

இதில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் 16.94 kmpl மைலேஜையும், ஆட்டோமேட்டிக் தேர்வில் 16.39 kmpl மைலேஜையும் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்ஸாவை காட்டிலும் ஜிம்னியின் மைலேஜ் மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வு இரண்டிலும் 3.2kmpl குறைவாகும். குறிப்பாக, மேனுவல் தேர்வில் பிரெஸ்ஸா 20கிமீ/ லிட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்குகிறது.

ஏனெனில் பிரெஸ்ஸாவில் அட்வான்ஸ்டு 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் என்ஜின் ட்யூயல் ஜெட் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது. ஆனால் ஜிம்னியில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப சில அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 36-டிகிரி அப்ரோச் ஆங்கிள், 24-டிகிரி ரேம்ப் பிரேக் ஓவர் ஆங்கிள், 50-டிகிரி டிபாச்சர் ஆங்கிள் என்பன அவை ஆகும். மேலும், ஆஃப்-ரோடுகளுக்கு ஏற்ப 210மிமீ-இல் நன்கு உயரமாக கிரவுண்ட் கிளியரென்ஸ் வழங்கப்படுகிறது.

maruti suzuki jimny mileage figures

5-கதவு ஜிம்னியின் நீளம் 3985மிமீ, அகலம் 1645மிமீ மற்றும் உயரம் 1720மிமீ ஆகும். முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2590மிமீ ஆகும். வாகனத்திற்கு பின்பக்கத்தில் 208 லிட்டர்கள் கொள்ளளவிற்கு இடவசதி வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கை வரிசையை மடக்கி கொள்வதன் மூலம் இதனை 332 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். தொழிற்நுட்ப அம்சங்களாக ஏசி, பவர் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை ஜிம்னி பெற்று வருகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆஃப்-ரோடு வாகனங்களின் ஒரே குறை என்னவென்றால், குறைவான மைலேஜ் தான். ஆனால் மாருதி சுஸுகி ஜிம்னி கிட்டத்தட்ட 17kmpl மைலேஜை வழங்கக்கூடியதாக இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இது அளவில் சிறிய பிரெஸ்ஸா காரை காட்டிலும் வெறும் 3.2kmpl மட்டுமே குறைவு என்பது இன்னும் நம்மை ஆச்சிரியத்துக்கு உள்ளாக்குகிறது.

Article Published On: Monday, May 22, 2023, 11:13 [IST]
English summary
Maruti suzuki jimny mileage figures revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X