Maruti Suzuki Jimny காரின் விலை இவ்ளோதானா! இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கல! அப்படி ஒரு சந்தோஷம் இப்ப!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது ஆஃப் ரோடு (Off-road) திறன்களுடன் கூடிய எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இந்த காரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் கூடிய விரைவில் விலை அறிவிக்கப்பட்டு, மாருதி சுஸுகி ஜிம்னி கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 103 பிஹெச்பி பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Maruti Jimny

மாருதி சுஸுகி ஜிம்னி காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், சுஸுகி கனெக்ட் தொழில்நுட்பம் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் என ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா (Shashank Srivastava) மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விலை குறித்து தற்போது பேசியுள்ளார். இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு மிகவும் சவாலான விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது அவரது பேட்டியின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

Maruti Suzuki Jimny Side Profile

மாருதி சுஸுகி ஜிம்னிக்கு மட்டுமல்லாது, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காருக்கும், சவாலான விலைதான் நிர்ணயம் செய்யப்படும் என சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த 2 கார்களையும் நாம் ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்க முடியும்.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்தான். அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்துதான் மாருதி சுஸுகி ஜிம்னி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த 2 கார்களின் விலை பற்றி மட்டுமல்லாது, முன்பதிவுகள் (Bookings) பற்றிய தகவல்களையும் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா பகிர்ந்துள்ளார். இதன்படி இந்த 2 கார்களும் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்துள்ளன. இதில், மாருதி சுஸுகி ஜிப்ஸி காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கை 24,500 ஆகும்.

எஞ்சிய 16,500 முன்பதிவுகளும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு குவிந்துள்ள முன்பதிவுகள் ஆகும். இந்த முன்பதிவு எண்ணிக்கைகளை வைத்து பார்க்கையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை காட்டிலும், மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை வெறும் 9 லட்ச ரூபாய் அல்லது 10 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 23:13 [IST]
English summary
Maruti suzuki jimny price shashank srivastava details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+