ஜிம்னியின் விலையை குறைத்த மாருதி சுஸுகி! 1 ரூபா, 2 ரூபா இல்ல ரெண்டு லட்ச ரூபா வரை கம்மி பண்ணிட்டாங்க..

இந்தியாவில் மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) காருக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட கார் மாடலே மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இதற்கு ஆஃப்-ரோடு கார் விரும்பிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. அத்தோடு, லைஃப்-ஸ்டைல் வாகன விரும்பிகள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், மஹிந்திரா தார் காருக்கு டஃப் கொடுக்கும் விஷயத்தில் லேசாக இந்த கார் மாடல் பின் தங்கி இருக்கின்றது அல்லது திணறிக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம்.

Maruti suzuki jimny prices cut

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் இந்த கார் மாடலில் மலிவு விலை தேர்வு ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் விலையில் ஜிம்னி-யைக் கையகப்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இந்த தேர்வுகளை சற்று விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான ஜிம்னி-யைக் காட்டிலும் கணிசமான அளவு குறைவான விலையிலேயே புதிய ஜிம்னியின் தேர்வுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்டாண்டர்டு ஜிம்னியைக் காட்டிலும் 2 லட்ச ரூபாய் மலிவான விலையில் புதிய தேர்வுகள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.

சிறப்பு பதிப்புகளாகவே இந்த மலிவு விலை தேர்வுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. அவை இந்த டிசம்பர் மாதம் வரையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. சிறப்பு பதிப்பானது தண்டர் எடிசன் (Thunder Edition) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதை ஆறு விதமான தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இதன் ஆரம்ப விலை ரூ. 10.74 லட்சம் ஆகும். மலிவு விலை தேர்வாக இருந்தாலும் வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் கூடுதல் அலங்கார அம்சங்களைத் தாங்கியதாக இந்த தண்டர் எடிசன் காட்சியளிக்கின்றன.

கூடுதல் ஆக்ஸசெரீஸாக இந்த காரில் ஸ்கிட் பிளேட், சைடு டோர் கிளாடிங், டோர் விஷர், கார்னிஷ் ஓஆர்விஎம்-கள் மற்றும் ஃபெண்டர்கள் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற கணிசமான மாற்றங்களை மட்டுமே இந்த காரில் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. ஆனால், மெக்கானிக்கல் அம்சத்தில் எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி செய்யவில்லை.

வழக்கமான ஜிம்னி-யைப் போலவே தண்டர் எடிசன் ஜிம்னியிலும் ஒற்றை மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே இதிலும் வழங்கப்படுகின்றது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.

இதேபோல் சிறப்பம்சங்களும் அப்படியே தண்டர் எடிசனில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஏசி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்சிங் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எந்த அம்சமும் குறைக்காமல் இந்த கார்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றதே என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரிதான் விலையை குறைத்து சிறப்பம்சங்களைக் கூடுதலாக்கியே இந்த தேர்வை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் உயர்நிலை தேர்வுகளான ஆல்ஃபாவின் விலையில் ரூ. 1 லட்சத்தையும், ஜீட்டா தேர்வின் விலையில் ரூ. 2 லட்சத்தையும் குறைத்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆண்டின் இறுதியை அதிக விற்பனை விகிதத்தில் நிறைவுறச் செய்யும் நோக்கிலேயே மாருதி சுஸுகி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அதாவது, ஜிம்னியின் விலையை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை குறைத்திருக்கின்றது. இந்த விலைக் குறைப்பிற்கே அது சிறப்பு பதிப்பு என்கிற பெயரை வைத்திருக்கின்றது. ஜிம்னியை வாங்கும் பிளான் இருந்தால், இந்த சிறப்பு சலுகை காலம் முடிவடைவதற்குள் வாங்கலாம் என்பதே எங்களின் கருத்தாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 1, 2023, 22:06 [IST]
English summary
Maruti suzuki jimny prices cut for limited period here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+