புக்கிங் பண்ணீட்டு தவம் கெடக்கறாங்க! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி காரின் உற்பத்தி தொடங்குது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் (2023 Auto Expo), இதன் தரிசனம் நமக்கு கிடைத்தது.
இந்திய சந்தைக்கான 5 டோர் ஜிம்னி காரை, 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால் இதன் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் மாதங்களில் விலை அறிவிக்கப்பட்டு, மாருதி சுஸுகி ஜிம்னி கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது நமக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மாருதி சுஸுகி ஜிம்னி காரின் உற்பத்தி பணிகள், வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல். ஒவ்வொரு ஆண்டும், 1 லட்சம் ஜிம்னி கார்களை உற்பத்தி செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 66 சதவீத கார்கள், அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் 7 ஆயிரம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும்.
அதே சமயம் எஞ்சிய கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்திய சந்தைக்கான மாருதி சுஸுகி ஜிம்னி கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். அவை ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகும். இந்த காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 103 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 134.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சுஸுகி நிறுவனத்தின் ஆல் க்ரிப் ப்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும்.
இந்த காருக்கு இந்திய சந்தையில் ஏற்கனவே 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிடும். இதன் விலை 10-12 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னி தவிர, ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்ற புதிய காரையும் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கும் முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் போட்டியிடும். இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications







