மாருதி ஜிம்னியில் எந்த வேரியன்ட் பெஸ்ட்? எது உங்களுக்கு ஏத்த வண்டி தெரியுமா?

நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற லைஃப் ஸ்டைல் எஸ்யூவி காரை 5 டோர் வெர்ஷன் காராக இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது. இந்த கார் 6 விதமான வேரியன்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வேரியன்ட் வாரியான விபரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் ஜிம்னி கார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ரூ12.74 லட்சம் முதல் ரூ15.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியன்டகள் உள்ளது.

Maruti Jimny Variant Details

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஒரே இன்ஜின் ஆப்ஷன் தான் இருக்கிறது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேரச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ஆகிய ஆப்ஷன்களுடன் இருக்கிறது. இதில் மேனுவல் வேரியன்ட் 16.94 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் கார் 16.39 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

இந்த காரில் சுஸூகி ஆல் கிரிப் ப்ரோ 4 வீல் டிரைவ் என்ற சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது 2 வீல் டிரைவ் ஹை, 4 வீல் டிரைவ் ஹை, மற்றும் 4 வீல் டிரைவ் லோ ஆகிய டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. இதன் வேரியன்டை பொருத்தவரை ஸேட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 2 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் ஆல்ஃபா டாப் எண்ட் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

Maruti Jimny Variant Details

ஸேட்டா வேரியன்டை பொருத்தவரை வீல்களில் ஸ்டீல் வீல், ரூஃப் ஹார்டு டாப், மழை நீரை முறையாக வடிய வைக்கும் டிரிப் ரயில், வீல் ஆர்ச் எக்ஸ்டென்ஷன் செய்யப்பட்ட அமைப்பு, கிளாம் ஷெல் எனப்படும் மாறி திறக்ககூடிய பானட் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன.

இந்த வேரியன்ட் காரின் உட்புறத்தில் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஃப்ளாட் ரிக்ளைனபில் முன்பக்க சீட்கள், மல்டிஃபங்சன் ஸ்டிரிங் வீல், மல்டி ஃபங்சன் டிஸ்பிளே, டெக்கோமீட்டர், 17.78 செ.மீ டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றம் ஆப்பிள் கார் பிளே, 4 ஸ்பீக்கர் ஆகிய ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது.

Maruti Jimny Variant Details

இந்த ஸோட்டா வேரியன்டின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், ஆல் பவர் விண்டோஸ், ரியர் ஆக்ஸசரி சாக்கெட்கள், முன்பக்கம் 2 ஏர்பேக், சைடு மற்றும் கர்டன் ஏர்பேக்குகள், லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா, சைடு இம்பேக்ட் டோர் பீம்கள், ஐஎஸ்ஓ பிக்ஸ் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஆல்ஃபா வேரியன்டில் அலாய் வீல்கள், பாடி கலர் ஹேண்டில், எல்இடி ஹெட்லைட்கள், ஃபாக் லைட்கள், டார்க் கிரின் கிளாஸ் ஆகியன இந்த காரின் வெளிப்புற தோற்றத்தில் ஸேட்டா வேரியன்டிலிருந்து மாறுபட்டு தெரிகிறது. உட்புறத்தை பொருத்தவரை லெதர் ஸ்டிரிங் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக 22.86 செ.மீ டச் ஸ்கிரின் மற்றும் ஆர்க்கமீஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆல்ஃபா வேரியன்டில் பல சொகுசு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தானாக ஆன் ஆகும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட், ஹெட்லேம்ப் வாஷர், எலெக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ஓஆர்விஎம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இந்த வேரியன்டில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஆல்ஃபா மற்றும் ஸேட்டா ஆகிய வேரியன்ட்களில் மேனுவல், ஆட்டோமெட்டிக் மற்றும் டூயல் டூல் ஆகிய ஆப்ஷ்கள் உள்ளன. அதன்படி ஸேட்டா மேனுவல் ரூ12,74,000 என்ற விலையிலும், ஸேட்டா ஆட்டோமெட்டிக் ரூ13,94,000 என்ற விலையிலும், ஆல்ஃபா மேனுவல் ரூ13,69,000 என்ற விலையிலும்,

ஆல்ஃபா ஆட்டோமெட்டிக் ரூ14,89,000 என்ற விலையிலும், ஆல்ஃபா மேனுவல் டூயல் டோன் ரூ13,85,000 என்ற விலையிலும், ஆல்ஃபா ஆட்டோமெட்டிக் ரூ15,05,000 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரை ரூ33,550 என்ற விலையில் மாத சப்ஸ்கிரிப்ஸன் முறையிலும் வாங்கிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை ஆல்ஃபா வேரியன்ட் பல சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக விற்பனைக்கு வருகிறது. இதன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. என்பதால் டாப் வேரியன்டை தான் பலர் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 14:39 [IST]
English summary
Maruti suzuki jimny suv launched find variant details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X