மாருதி களமிறக்கிய புது காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம தெணற போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). இது லைஃப் ஸ்டைல் எஸ்யூவி (Lifestyle SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூன் மாதம்தான் மாருதி சுஸுகி ஜிம்னி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் தண்டர் எடிசன் (Thunder Edition) என்ற பெயரில் புத்தம் புதிய மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Maruti Suzuki Jimny

ஆனால் இது ஒரு லிமிடெட் எடிசன் (Limited Edition) ஆகும். அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) வேரியண்ட்களில், மாருதி சுஸுகி ஜிம்னி தண்டர் எடிசன் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த தண்டர் எடிசன் மாடலின் ஆரம்ப விலை (Price) வெறும் 10.74 லட்ச ரூபாய் மட்டுமே.

இது எக்ஸ் ஷோரூம் (Ex-showroom) விலை என்பது குறிப்பிடத்தக்கது. ரெகுலர் மாடலின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது, இந்த தண்டர் எடிசனின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களின் விலை முறையே 2 லட்ச ரூபாய் மற்றும் 1 லட்ச ரூபாய் குறைவு ஆகும்.

Maruti Suzuki Jimny Thunder Edition

இதன் காரணமாக இந்த தண்டர் எடிசன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கருதுகிறது. இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு மாருதி சுஸுகி ஜிம்னி தண்டர் எடிசன் மாடல் தற்போது வர தொடங்கியுள்ளது.

ரெகுலர் மாடவ் உடன் ஒப்பிடும்போது, மலை போன்ற கிராபிக்ஸ் உள்ளிட்ட ஒரு சில அம்சங்கள் மூலமாக மாருதி சுஸுகி ஜிம்னி தண்டர் எடிசன் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.

இந்த K15B இன்ஜின், அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையை சொல்வதென்றால், மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஜிம்னி காரின் விற்பனை சிறப்பாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் சமீப காலமாக ஜிம்னி காருக்கு தள்ளுபடிகளை வழங்கி வந்தது. இந்த வரிசையில்தான் தற்போது ஜிம்னி காரின் விலை குறைவான லிமிடெட் எடிசன் மாடல் களமிறக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 22:10 [IST]
English summary
Maruti suzuki jimny thunder edition dealer dispatches begin in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+