Maruti Jimnyஇன் வருகைக்காக காத்திருக்கீங்களா பாஸ்... மே 2ஆம் வாரத்தில் உங்களுக்காக காத்திருக்கும் குட் நியூஸ்!
இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னி-யும் ஒன்று. இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் 2023 ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்த கையோடு அன்றைய தினமே அக்காருக்கான புக்கிங் பணிகளையும் தொடங்கிவிட்டது.
இப்போது, இந்த காருக்கு மலை அளவு புக்கிங் குவிந்துக் காணப்படுகின்றது. மார்ச் இறுதிக்குள்ளாகவே 23,500க்கும் அதிகமான புக்கிங்குகள் ஜிம்னி கிடைத்து விட்டன. இந்நேரம், அது 25 ஆயிரத்தைத் தொட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இன்னும் ஒரு சில வாரங்களில் மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காரை புக் செய்திருப்பவர்கள் மற்றும் எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் ஜிம்னி எஸ்யூவி எப்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகி இருக்கின்றது.
வரும் மேத மாதம் இரண்டாம் வாரத்திலேயே இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் மே 13க்குள் ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டு விடும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வர இருப்பது ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி ஆகும்.

உலக சந்தையில் இந்த கார் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் வருகை இந்திய வருகை பற்றிய எந்த விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனமாக ஜிம்னியை, மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது. அதேவேளையில், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற காராகவும் இது இருக்கும் என கூறப்படுகின்றது.
அதாவது, மஹிந்திரா தார் எஸ்யூவி-யைபோல பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்டதாக ஜிம்னி இருக்கும். தார் காருக்கு போட்டியாகவே ஜிம்னியை இந்தியாவில் களமிறக்குகிறது, மாருதி. இதற்கு மட்டுமல்ல ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்காவிற்கும் ஜிம்னியின் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது. மாருதி சுஸுகி ஜிம்னி ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும்.
இந்த காரில் 9 அங்குல டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் என எக்கசக்க பிரீமியம் அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. இதில், கொடுக்கப்பட்டு இருக்கும் 9 அங்குல திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா உள்ளிட்டவற்றை நம்மால் ஜிம்னியில் காண முடியும்.
மோட்டாரை பொருத்த வரை மாருதி சுஸுகி ஜிம்னியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஜிம்னியில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மாருதி சுஸுகியின் இந்த கார் அதிக மைலேஜ் திறன் கொண்ட காராக விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்டருக்கு 20 கிமீ முதல் 22 கிமீ வரையில் மைலேஜ் தர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை மாருதி உறுதிப்படுத்தவில்லை. இந்த காரின் வருகையால் தார் விற்பனையில் பெரிய சரிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









