மாருதி ஜிப்ஸியை மறக்கடிக்க கூடியதா புதிய ஜிம்னி? இரண்டையும் இந்த விஷயத்தில் அடிச்சுக்க முடியாது!!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து ஜிம்னி என்ற ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் என்றாலே நமக்கு முதலாவதாக நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஜிப்ஸி தான். இந்த இரு ஜப்பானிய ஸ்டைல் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றியே இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

செயல்படுதிறன்: ஆரம்பத்தில் 1.0 லிட்டர் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிப்ஸியில் 1996இல் மாருதி எஸ்டீமின் 1.3 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டது. 80 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக இந்த 1.3 லிட்டர் என்ஜின் உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டது என்றாலும், கார் ஆர்வலர்கள் ஜிப்ஸியில் மற்ற கார்களின் என்ஜினை பொருத்தவே விரும்பினர். குறிப்பாக, பலேனோ காரில் வழங்கப்பட்ட டீசல் என்ஜின் உடன்.

maruti suzuki jimny vs iconic gypsy

இந்த பிரச்சனை புதிய ஜிம்னியில் இல்லை. ஜிம்னியில் மாருதி சுஸுகியின் மாடர்ன் கார்களான பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகாவில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் கே15பி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் என்ஜின் தேர்வு எதுவும் இல்லை. ஜிம்னியை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். ஆனால் ஜிப்ஸி 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸாக மாற்றப்பட்டது.

ஆஃப்-ரோடு திறன்: ஜிப்ஸியில் குறைந்த-விகித 4-சக்கர-டிரைவ் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. இதன் மூலமாக எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய அட்வென்ச்சர் வாகனமாக ஜிப்ஸி விளங்கியது. ஜிப்ஸி விற்பனையில் இருந்த சமயத்தில் ஆட்டோமொபைல் துறை இயந்திர பாகங்களில் அந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை. இருப்பினும் போர்டல் ஆக்ஸல்ஸ் போன்ற ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தேவையான சில ஆக்ஸஸரீகள் சந்தையில் கிடைத்தன.

ஜிப்ஸியின் DNA-வை அப்படியே கொண்ட வாகனமாக மாருதி சுஸுகி ஜிம்னி விளங்குகிறது. இதனால் ஆஃப்-ரோடு திறனில் இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் ஜிம்னி இந்த மாடர்ன் காலத்தில் அறிமுகமாகி உள்ளதால், ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல், பிரேக் டிஃப்ரென்ஷியல் லாக்குகள் போன்றவை மலை பாதைகளில் தேவையான டிராக்‌ஷன் கண்ட்ரோலிற்காக வழங்கப்பட்டுள்ளன.

maruti suzuki jimny vs iconic gypsy

தினசரி பயன்பாடு: தினந்தோறும் பயன்படுத்துவதற்கு எது ஏற்றது? என்று பார்த்தால், ஜிப்ஸி என்றே அதனை பயன்படுத்தியவர்களுக்கு தோன்றும். ஆனால் உண்மையில், ஜிப்ஸி இலை சுருள் சஸ்பென்ஷனை கொண்டது. இத்தகைய சஸ்பென்ஷன்கள் கடினமான ரைடிங் உணர்வை வழங்குபவை. அதாவது, ஜிப்ஸியில் கிட்டத்தட்ட பீரங்கி வண்டியை இயக்குவது போன்ற உணர்வே கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஹைவேயில் ஜிப்ஸியில் 80kmph வேகத்திற்கு மேல் சென்றால், என்ஜின் அதிகம் உழைக்க வேண்டி இருந்தது.

ஜிப்ஸி உடன் ஒப்பிட்டால், ஜிம்னி சிறப்பான சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. அதேபோல், ஜிம்னியில் நன்கு திருத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஜிம்னியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், பவர் ஜன்னல் கண்ணாடிகள், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி போன்றவையும் வழங்கப்படுவதால், பெரியதாக பிரச்சனையின்றி, ஜிம்னியை தினந்தோறும் பயன்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஜிப்ஸி 1990ஆம் காலக்கட்டங்களில் விற்பனையில் இருந்த வாகனம், ஜிம்னி தற்கால மாடர்ன் வாகனம். ஆகையால் இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு. இரண்டும் அந்தந்த காலங்களில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய வாகனங்களாக விளங்குகின்றன. புதிய மாருதி சுஸுகி ஜிம்னி தற்கால மாடர்ன் தொழிற்நுட்பங்களை கொண்டதாக, பரிணாம வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது!

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 21:35 [IST]
English summary
Maruti suzuki jimny vs iconic gypsy comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+