மாருதி ஜிம்னி இவ்ளோ ஒர்த்தான காரா! தண்ணீருல நீந்தி போறதுல கப்பல், படகுகளையே இது ஓவர்டேக் செஞ்சிடும் போலிருக்கே
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய வரவான ஜிம்னி (Maruti Suzuki Jimny) சூப்பரான நீந்தி செல்லும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க,
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சமீபத்திய வரவாக ஜிம்னி இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி-க்கு போட்டியாக இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த காரை மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது.

இந்த திறனை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி ஜிம்னி மழை நீர் நிறைந்த சாலையில் மிக அசால்டாக பயணிக்கும் வீடியோவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த திறன் கப்பல், படகுகளுக்கே கொடுக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை வாட்டர் வேடிங் திறன் என்பர். நீர் நிறைந்த சாலையில் கார் இயங்கும் திறனையே இவர் அழைக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளுக்கு இதுபோன்ற திறன் மிக்க கார்களே அதிகம் தேவைப்படுகின்றது. இந்தியாவில் எப்போது மழை கொட்டி தீர்க்கும், எங்கு மழை வெள்ள நீர் சூழ்ந்து நிற்கும் என்பதை யாராலும் துள்ளியமாக கணிக்க முடியாது.

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மழை காலங்களில் பயணிப்பது மிகவும் சவாலானது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளே நிறைந்துக் காணப்படுகின்றது. இதுமாதிரியான நகரங்களைக் கூட அசால்ட் செய்யும் திறனிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே வீடியோ அமைந்திருக்கின்றது.
ஜிம்னியின் வீல்கள் அனைத்தும் முழுமையாக மூழ்கிய நிலையிலும் அது மிக சிறப்பாக இயங்கி இருக்கின்றது. வேறு ஏதேனும் காராக இருந்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தை கடப்பதில் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து இருக்கும். அவை அந்த சாலையை கடந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

அதிகபட்சம் அக்கார் பழுதாகி நின்றிருக்கும் அல்லது அந்த இடத்தைக் கடக்க பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும். ஆனால், இதுபோன்று எந்த சிக்கலையும் மாருதி சுஸுகி ஜிம்னி சந்திக்கவில்லை என்பதே ஆச்சரியம். இது 'ஃப்ளூக்' என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் உரிையாளர்கள் இந்த செயலை ஒன்றிற்கு இரண்டு முறை செய்திருக்கின்றார்.
ஒரு முறைகூட அந்த கார் மழை வெள்ள நீரால் தடைபடவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை தாரைக் காட்டிலும் சற்று அதிக விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கன்றது. ஜிம்னியின் ஆரம்ப விலையே ரூ. 12 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். 5 கதவுகள் கொண்ட வெர்ஷனே தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இதையே மூன்று கதவுகள் கொண்ட தார் காருக்கு மாருதி சுஸுகி போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. என்னதான் இதுபோன்று மிக சிறந்த ஆஃப் ரோடு திறனை வாகனங்கள் கொண்டிருந்தாலும், அதனை ஆழம் தெரியாமல் நீர் நிறைந்த பாதைக்குள் இயக்குவது மிகுந்த ஆபத்தானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இளைஞர்கள் ஏற்கனவே தங்களுக்கு பரீட்சையமான சாலையில் வைத்தே காரை இயக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆபத்து இருக்காது என்பதே அந்த சாலையில் ஜிம்னியை பலமுறை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றனர். எனவே இதுமாதிரியான சோதனையில் எடுத்தோம், கவுத்தோம் என ஈடுபட வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.


Click it and Unblock the Notifications









