100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 2 ரூபாவ திருப்பி கொடுப்பாங்க... மாருதி கஸ்டமர்களுக்கு செம்ம ஜாக்பாட்!
மாருதி சுஸுகி அதன் ரிவார்ட்ஸ் (Maruti Suzuki Rewards) திட்டத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலனை அளிக்கும் விதமாக இந்தியன் ஆயில் நிருவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, நாட்டின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் உடன் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் 'மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ்' (Maruti Suzuki Rewards) உள்ள பயனாளிகளுக்கு கூடுதல் பலனை அளிக்கும் விதமாக கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

மாருதி சுஸுகியின் இந்த ரிவார்ஸ்ட்ஸ் திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக பலனை வழங்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேவையை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் விதமாகவே இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் தனது கூட்டணியை மாருதி சுஸுகி தொடங்கி இருக்கின்றது.
மாருதி சுஸுகி ரிவார்ட்ஸ் பயன்பாட்டாளர்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போடும்போது கூடுதல் பலனை அனுபவிக்க முடியும். ஆம், ஒவ்வொரு முறையும் இங்கு பெட்ரோல் நிரப்பும்போது ரிவார்ட்ஸ் பாயிண்டுகள் கிடைக்கும். 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினால் அதற்காக 2 பாயிண்டுகள் வழங்கப்படும்.

இது மட்டுமில்லைங்க ஆண்டின் முதல் காலாண்டிற்கு உள்ளேயே ரூ. 25 ஆயிரம் வரை ஐஓசிஎல் பங்க்குகளில் பெட்ரோலை நிரப்பினால் கூடுதலாக 350 ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆம், 100 ரூபாய்க்கு வழங்கப்படும் 2 பாயிண்டுகளுடன் சேர்த்தே இந்த 350 கூடுதல் ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்படும்.
தற்போது மாருதி சுஸுகியின் ரிவார்ட்ஸ் திட்டத்தை 8 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் பலனை வழங்கும் விதமாகவே இந்த திட்டத்தை மாருதி சுஸுகி அறிமுகம் செய்திருக்கின்றது. இதுதவிர சில குறிப்பிட்ட ஸ்டோர்களில் பொருட்களை வாங்கும்போதும் ரிவார்ட் பாயிண்ட் பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, மாருதி சுஸுகியின் சர்வீஸ்களை நாடும் போது பல்வேறு பலன்கள் ரிவார்ட் திட்டம் மூலம் வழங்கப்படு வருகின்றது. உதிரிபாகம், சர்வீஸ் என பலவற்றில் ரிவார்டு பாயிண்ட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ரிவார்டு பாயிண்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 1 ரூபாய்க்கு சமம் ஆகும்.
ஆகையால், இந்தியன் ஆயில் கார்பரேஷனில் நாம் 100 ரூபாயை செலவழித்து பெட்ரோல் நிரப்பினால் 102 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புவதற்கு சமம் ஆகும். இத்தகைய சூப்பரான பலனை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என்பதற்காகவே மாருதி சுஸுகி, இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மிகப் பெரிய சேமிப்பை மாருதி சுஸுகியின் ரிவார்ட்ஸ் திட்டம் அதன் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இதனை இரு மடங்காக்கும் வகையிலேயே இந்தியன் ஆயில் கார்பரேஷன் உடன் தற்போது அந்நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








