மாருதி இன்விக்டோ விற்பனைக்கு அறிமுகம்! இது 23கிமீ மைலேஜ் தருமா! டொயோட்டா இன்னோவா ஹைகிராஸுக்கு சங்கு கன்ஃபார்ம்

கடந்த சில நாட்களாகவே இந்திய வாகன உலகில் ஓர் தகவல் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. அது மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்பு பற்றிய தகவலே ஆகும். ஆம், இன்விக்டோவை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த காரையே தற்போது மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த காருக்கு எதிர்பார்ப்பு பெரிதும் நிலவி வந்தநிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த கார் அறிமுகம் செய்யப்படுவது முதல் முறையாகும். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார் மாடலே இன்விக்டோ என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரணத்திற்காகவே இந்தியாவில் இன்விக்டோவின் வருகை பேசு பொருளாக மாறியது.

Maruti suzuki invicto

இன்னோவா ஹைகிராஸை உருவாக்க பயன்படுத்தப்படும் டிஎன்ஜிஏ பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இன்விக்டோவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அழகு மற்றும் ஸ்டைல் என பலவற்றில் இன்னோவா ஹைகிராஸை ஒத்துப் போகும் வகையில் இன்விக்டோ இருக்கின்றது. இருப்பினும், சாலையில் இது தோன்றும்போது இன்னோவா ஹைராஸிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும்.

இதற்காக கணிசமான மாற்றங்கள் வெளிப்புறத்தில் செய்யப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், தூரத்தில் இருந்து பார்க்கையில் இன்னோவா ஹைகிராஸை பிரதிபலிப்பதை இன்விக்டோவால் தவிர்க்க முடியவில்லை. அதேவேளையில், கொஞ்சம் நெருங்கி வந்து பார்த்தால் இன்விக்டோவின் தனிச் சிறப்புகளை நம்மால் அடையாளம் காண முடியும். மாருதி சுஸுகி-யின் சின்னம், இன்விக்டோ எனும் பெயர் பேட்ஜ் உள்ளிட்டவை இன்னோவா ஹைகிராஸிடம் இருந்து இன்விக்டோவை வேறுபடுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

Maruti suzuki invicto launch side design

இதுதவிர, நெக்ஸா மற்றும் ஹைபிரிட் எனும் பேட்ஜ்களும் இன்விக்டோவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த கார் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்க இருப்பதை இந்த 'நெக்ஸா' பேட்ஜ் உறுதி செய்திருக்கின்றது. இதுதவிர இன்னும் பல பிரத்யேக சிறப்பு மாற்றங்களை இன்விக்டோவின் வெளிப்புறத்தில் நம்மால் பார்க்க முடிகின்றது.

புதிய கிரில், புதிய லைட் செட்-அப், பக்கவாட்டு மற்றும் பின் பக்கங்களில் புதிய டிசைன் உள்ளிட்டவை இன்விக்டோவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய அம்சங்களைக் கொண்ட இன்விக்டோ எம்பிவி காரையே மாருதி சுஸுகி இந்தியாவில் இப்போது விற்பனைக்கு அறிமகும் செய்திருக்கின்றது. மாருதி சுஸுகி இன்விக்டோ ஒட்டுமொத்தமாக இரண்டு விதமான ட்ரிம் மற்றும் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

Maruti suzuki invicto launch rear design

ஜீட்டா பிளஸ் 7 சீட்டர், ஜீட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் ஆகியவையே அவை ஆகும். ஆரம்ப நிலை தேர்வான ஜீட்டா பிளஸ் 7 சீட்டர் ரூ. 24.79 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஜீட்டா பிளஸ் 7 சீட்டர் ரூ. 24.84 லட்சத்திற்கும், ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் 28.42 லட்ச ரூபாவுக்கும் விற்பனைக்குக் கிடைக்கும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மாருதி சுஸுகி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். நீலம், வெள்ளை, சில்வர் மற்றும் கிரே ஆகியவையே அவை ஆகும்.

Maruti suzuki invicto launch front design

எஞ்ஜினை பொருத்த வரை இந்த காரிஸ் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 184 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இ-சிவிடி கியர்பாக்ஸே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவை இரண்டும் இணைந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.24 கிமீ மைலேஜை தருமாம். இதேபோல், 9.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இதனால் எட்டிவிட முடியும் என கூறப்படுகின்றது. இந்த திறன்கள் மாருதி சுஸுகி இன்விக்டோவை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிக பெரிய விருந்தளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அடாஸ் தொழில்நுட்பம், 10.1 அங்குல தொடுதிரை (இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் செட்-அப், டிரைவருக்கு பவர்டு இருக்கை, 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவற்றைப் போலவே பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக ஏராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் விற்பனைக்கு ஆப்பு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் அட்டகாசமான உருவ அமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன. குறிப்பாக, சொகுசான பயண அனுபவத்தை பெற நினைப்பவர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 5, 2023, 14:00 [IST]
English summary
Maruti suzuki launches innova hycross based invicto mpv starting at rs 24 79 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X