Super Carry அப்டேட் ஆகிடுச்சு! இப்ப புதுசா என்னெல்லாம் இருக்கு தெரியுமா? குட்டி யானைக்கு செம போட்டி

மாருதி நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் ஒரே லைட் கமர்ஷியல் வாகனம் என்றால் அது சூப்பர் கேரி தான். அந்த வாகனத்தை தற்போது மாருதி நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த சூப்பர் கேரி இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் கே-சிரீஸ் டூயல் ஜெட், விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இ்நத வாகனம் 6000 ஆர்பிஎம்மில் 80.7 பிஎஸ் பவரையும், 2900 ஆர்பிஎம்மில் 104.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

updated super carry

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் பைழய கியர் பாக்ஸிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 வேரியன்டில் இந்த சூப்பர் கேரி விற்பனையாகி வந்த நிலையில் தற்போது சிஎன்ஜி கேப் வேரியன்ட் சேர்ந்து 4 வேரியன்டாக மாறியுள்ளது. முன்னதாக சிஎன்ஜின டெக், பெட்ரோல் டெக், பெட்ரோல் கேப் ஆகிய வேரியன்ட்கள் இருந்தன.

தற்போது அப்டேட் செய்யப்பட்ட சூப்பர் கேரி வாகனத்தின் விலையைப் பொருத்தவரை பெட்ரோல் டெக் வேரியன்டை பொருத்தவரை ரூ5.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதுவே பெட்ரோல் கேப் சேஸிஸ் வேரியன்டை பொருத்தவரை ரூ5.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. சிஎன்ஜி டெக்கை பொருத்தவரை ரூ6.30 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி கேப் வேரியன்டை பொருத்தவரை ரூ6.15 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

updated super carry

இந்த அப்டேட் செய்யப்பட்ட சூப்பர் கேரியின் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக புதிய இன்ஜின் இம் மொபிலைஸர் சிஸ்டம், ரிவர்ஸ் சென்சார், முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக், இது போக சீட்பெல்ட் ரிமைன்டர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இது போகப் பழைய மாடலிலிருந்து அப்டேட் செய்யப்பட்டுள் போது ஸ்டியரிங் வீல் சற்று பெரியதாகவும், லைட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கையாள எளிமையாக இருக்கும்.

முன்னரே சொன்னபடி இதில் கியர் பாக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. காரில் கியர் மாற்றுவது போல இதில் தற்போது கியர் மாற்ற முடியும். இதன் உட்புற கட்டமைப்பு அடிக்கடி பிரேக் பிடித்துச் சென்றாலும் தொந்தரவு இல்லாத வகையில் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சூப்பர் கேரி எஸ்-சிஎன்ஜி வேரியன்டை பொருத்தவரை எமர்ஜென்ஸி பெட்ரோல் டேங்க் 5 லிட்டர் கொள்ளளவுடன் வழங்கப்பட்டுள்ளது.

updated super carry

இந்த சூப்பர் கேரி மாருதி நிறுவனத்தின் 270 நகரங்களில் அமைந்துள்ள 370 கமர்ஷியல் அவுட்லெட்கள் மூலம் விற்பனையாகிறது. இந்த வாகனம் இ-காமர்ஸ், கொரியர், எஃப்எம்சிஜி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனம் மொத்தம் 3800 மிமீ நீளமும், 1883 மிமீ உயரமும், 1562 மிமீ அகலமும், 2110 மிமீ வீல் பேஸூம் கொண்டது.

இதன் லோடை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் 740 கிலோ எடையையும், சிஎன்ஜி வேரியன்டில் 625 கிலோ எடையையும் எடுத்துச் செல்ல முடியும். சிஎன்ஜி வ வேரியன்டிலும் அதே 1.2 லிட்டர் இன்ஜின் தான். ஆனால் இது 71.6 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது தான் அதன் லோடு கேப்பாசிட்டியும் குறைவு தான்.

More from DriveSpark

Article Published On: Monday, April 17, 2023, 18:30 [IST]
English summary
Maruti suzuki launches upgraded lcv super carry full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X