சும்மா குறை சொல்லிட்டே இருக்காதீங்க சார், மாருதி காரை எத்தனை லட்சம் பேர் நம்பி வாங்கியிருக்காங்க தெரியுமா?
ஏப்ரல் மாதம் பிறந்துவிட்டது, தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஒவ்வொருவராகக் கடந்த மார்ச் மற்றும் 2022-23 நிதியாண்டிற்கான விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாருதி நிறுவனத்தின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதை விரிவாகக் காணலாம்.
மாருதி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 1,70,071 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது உள்நாட்டில் விற்பனையான 1,36,787 வாகனங்கள், மற்ற ஓஇஎம்மிற்கு தயாரித்த 3165 வானகங்கள், மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட 30,119 வாகனங்களின் கூட்டுத் தொகையாகும்.

நிதியாண்டு விபரங்களைப் பொருத்தவரை கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் எலெக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்தது. இதனால் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பை ஓரளவிற்கு குறைக்கும் வகையில் இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது.
கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 19,66,164 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 16,44,876 வாகனங்கள், மற்ற நிறுவனங்களுக்காகத் தயாரிக்கப்பட்டது 61,995 வாகனங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டது. 2,59,333 வாகனங்கள் ஆகும். இனி செக்மெண்ட் ரீதியான விபரங்களைக் காணலாம்.

மினி செக்மெண்டில் இந்நிறுவனம் ஆல்டோ மற்றும்
எஸ்-பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 11,582 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாதம் 15,491 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது தற்போது விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
நிதியாண்டு கணக்கிலும் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 1,095,940 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021-22 நிதியாண்டில் 9,16,643 கார்கள் விற்பனையாகியிருந்தது. நிதியாண்டில் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டு கொரோனா 2ம் அலை காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக காம்பேக்ட் செக்மெண்டை பொருத்தவரை பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், டூர்எஸ், வேகன் ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இது கடந்த மார்ச் மாதம் 71,832 கார்களையும் கடந்தாண்டு மார்ச் மாதம் 82,314 கார்களையும், நிதியாண்டில் 8,63,029 கார்களை கடந்த நிதியாண்டிலும், 7,04,881 கார்களை 2021-22 நிதியாண்டிலும் விற்பனை செய்துள்ளது.
அடுத்தாக மிட்-சைஸ் செக்மெண்டில் இந்நிறுவனம் சியாஸ் என்ற ஒரே ஒரு காரை தான் விற்பனை செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 300 கார்களயும் கடந்தாண்டு மார்ச் மாதம் 1,834 கார்களையும், 2022-23 நிதியாண்டில் 13,610 கார்களையும், 2021-22 நிதியாண்டில் 15,869 கார்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
யூட்டிலிட்டி வாகனங்களைப் பொருத்தவரை பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ், எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த மார்ச் மாதம் 37,054 கார்களையும் கடந்தாண்டு மார்ச் மாதம் 25,001 கார்களையும், 2022-23 நிதியாண்டில் 3,66,29 கார்களையும் 2021-22 நிதியாண்டில் 2,90,701 கார்களையும் விற்பனை செய்துள்ளது.
வேன் செக்மெண்டில் ஈக்கோ என்ற ஒரே ஒரு வேனை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 11,995 வேன்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாதம் வெறம் 9,221 வேன்களை விற்பனை செய்திருந்தது. நிதியாண்டைப் பொருத்தவரை 1,31,191 கார்களை விற்பனை செய்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் 1,08,345 கார்களை விற்பனை செய்துள்ளது.
கடைசியாக லைட் கமர்ஷியல் வாகன செக்மெண்ட் இருக்கிறது. இதில் சூப்பர் கேரி என்ற ஒரே ஓரு வாகனத்தைத் தான் விற்பனை செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 4,024 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2022 மார்ச் மாதம் 3,797 கார்களை விற்பனை செய்திருந்தது. நிதியாண்டு வகையில் 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் 38,006 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது, 2021-22 நிதியாண்டில் 33,812 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








