மைலேஜை அள்ளி அள்ளி கொடுக்கும் காருக்கான புக்கிங்கை தொடங்கிய மாருதி சுஸுகி... விலையும் இவ்ளோ கம்மிதானா!!
மைலேஜ் அதிகம் கொடுக்கும் புதுமுக சிஎன்ஜி காருக்கான புக்கிங்கை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார்?, எவ்வளவு மைலேஜ் தரும் என்கிற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் பிரபலமான தயாரிப்புகளில் பிரெஸ்ஸா (Brezza)-வும் ஒன்று. இந்த காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனையே நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகைக்கு இந்திய சிஎன்ஜி கார் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இக்காருக்கான புக்கிங் பணிகளை மாருதி சுஸுகி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு சில தினங்கள் அல்லது வாரங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. இதனை முன்னிட்டே தற்போது புக்கிங்குகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் ஒரு கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் 27 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 19.80 கிமீ தொடங்கி 20.15 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் கொடுக்கும்.

பெட்ரோல் வெர்சனை விட பலமடங்கு அதிக மைலேஜை அள்ளி அள்ளிக் கொடுக்கும் வெர்சனாக சிஎன்ஜி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த காரின் வருகையை சிஎன்ஜி கார் பிரியர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கார் அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக மட்டுமே உருவாக்கப்படவில்லை, அதனை, அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாகவும் மாருதி சுஸுகி வடிவமைத்திருக்கின்றது.
வழக்கமான பிரெஸ்ஸாவில் காணப்படும் பிரிமீயம் அம்சங்கள் பெரும்பாலும் சிஎன்ஜி பிரெஸ்ஸாவிலும் இடம் பெற்றிருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 9.0 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, அலெக்ஸா, வாய்ஸ் கமெண்ட் அம்சம், ஹெட்ஸ்-அப் திரை, ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், பின் பக்கத்திற்கான ஏசி துளைகள், ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், செல்போன் சார்ஜிங் போர்ட்டுகள் போன்ற எக்க வசதிகளையும் புதிய சிஎன்ஜி பிரெஸ்ஸாவில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
இது தவிர, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோக்ராம் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் பிரெஸ்ஸா சிஎன்ஜியில் இடம் பெற்றிருக்கும். பிரெஸ்ஸா சிஎன்ஜி-யை ஒட்டுமொத்தமாக ஏழு விதமான தேர்வுகளில் மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ 5 எம்டி (CNG LXI 5MT), சிஎன்ஜி விஎக்ஸ்ஐ 5எம்டி/ 6ஏடி (CNG VXI 5MT/6AT), சிஎன்ஜி இசட்எக்ஸ்ஐ 5எம்டி/ 6ஏடி (CNG ZXI 5MT/6AT) மற்றும் சிஎன்ஜி இசட்எக்ஸ்ஐ பிளஸ் 5எம்டி/ 6ஏடி (CNG ZXI+ 5MT/6AT) ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
மாருதியின் அனைத்து சிஎன்ஜி கார்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பிரெஸ்ஸா சிஎன்ஜி விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 சிஎன்ஜி கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே கே15சி ஸ்மார்ட் ஹைபிரிட் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பிரெஸ்ஸா சிஎன்ஜியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 88 எச்பி பவரையும், 121.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார் பெட்ரோலில் இயங்கும்போது இதை விட அதிக பவரை வெளியேற்றும். 102 எச்பி பவரையும், 137 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இந்த காருக்கு ரூ.10 லட்சம் முதல் 12லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









