எவ்ளோ நாள் ஆனாலும் பரவால! மாருதி சுஸுகி கார்களுக்காக ஒற்றை காலில் தவம் கிடக்கும் மக்கள்! இத்தன லட்சம் பேரா!
இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சமீப காலமாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. புதிய பிரெஸ்ஸா (Brezza) , க்ராண்ட் விட்டாரா (Grand Vitara), ஃப்ரான்க்ஸ் (Fronx) மற்றும் ஜிம்னி (Jimny) ஆகிய கார்களின் வருகைதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதில், ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய 2 கார்களும், நடப்பு 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் 3.86 லட்சம் பேர் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக காத்து கொண்டுள்ளனர்.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் கடைசியாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது ஜிம்னிதான். இந்த காரின் டெலிவரிக்காக காத்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாக உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை 12.74 லட்ச ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.05 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும் (Price). மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக ஜிம்னி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி கார்களின் டெலிவரிக்காக காத்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏனெனில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் மிக வேகமாக தயாராகி கொண்டுள்ளது. இதில், மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) ஒன்றாகும். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் இது.
வரும் ஜூலை 5ம் தேதி, மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்து, க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 2 கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு நிறுவனத்தின் கார்களுக்காக கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் காத்திருப்பது என்பதெல்லாம், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மட்டுமே நடக்க கூடிய விஷயம் ஆகும். இவ்வளவு வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்யும் வகையில், கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








